For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியின் ரூ.15 லட்சம் வாக்குறுதிக்கு இதுதான் காரணம்.. நிதின் கட்கரி சொன்ன திடுக்!

பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடியின் ரூ.15 லட்சம் வாக்குறுதிக்கு நிதின் கட்கரி சொன்ன திடுக்கிடும் காரணம்!- வீடியோ

    டெல்லி: பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று பாஜக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார்.

    தற்போது இந்தியா அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி கொடுத்த ''பொய்யான'' வாக்குறுதி மீண்டும் விவாத பொருளாகி உள்ளது.

    Why Modi made Rs.15 lakh promise to come to power, reveals Nitin Gadkari

    சென்ற நாடாளுமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, நான் ஆட்சிக்கு வந்தால், இந்திய குடிமகன்கள் எல்லோரின் வங்கிகணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என்று கூறினார். இது பெரிய வரவேற்பை பெற்றது.

    ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு வருடம் முடிந்தும் வங்கி கணக்கு என்ன, பேஸ்புக் கணக்கில் கூட ஒரு ரூபாய் கூட போடப்படவில்லை. இதை வைத்து பாஜக அரசை பலர் விமர்சிப்பதும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தலின் போது ரூபாய் 15 லட்சம் கொடுப்பதாக கூறியதற்கு காரணம் என்ன என்று அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் கொடுத்துள்ளார். நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் இந்த விளக்கத்தை அளித்தார்.

    அதில் அவர், நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று நினைத்தோம். அப்படி நினைத்துதான் நாங்கள் நிறைய வாக்குறுதிகளை கொடுத்தோம். ஆனால் கடைசியில் ஆட்சிக்கு வந்துவிட்டோம்.

    இப்போது மக்கள் எங்களிடம் அந்த வாக்குறுதி குறித்து கேட்கிறார்கள். நாங்கள் எதுவும் சொல்லாமல் சிரித்துவிட்டு கடந்து விடுகிறோம். வேறு வழியில்லை என்றுள்ளார்.

    இவரின் இந்த பேச்சு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல தீனியாக அமைந்துள்ளது. அதோடு, பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

    {document1}

    English summary
    Why Modi made Rs.15 lakh promise to come to power, reveals Nitin Gadkari.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X