குஜராத் தேர்தல்.. மனமாறும் இஸ்லாமியர்கள்? இந்த முறை வெல்லப்போவது யார்! காத்திருக்கும் ட்விஸ்ட்?
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குள்ள மக்களின் மனநிலை என்னவாக உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அங்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியே தொடரும் நிலையில், இந்த முறை என்ன நடக்கும் என்பதை நாம் சில நாட்கள் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினர். குறிப்பாகப் பிரதமர் நரேந்திர மோடியே கடைசிக் கட்டத்தில் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்தார்.

குஜராத்
கடந்த காலங்களில் நடந்த குஜராத் தேர்தலை விட இந்த முறை குஜராத் தேர்தலில் சில மாற்றங்கள் இருக்கவே செய்கிறது. பொதுவாக குஜராத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் நேரடியான போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை அப்படியில்லாமல் வேறு சில புதிய கட்சிகளும் தேர்தலில் களமிறங்குகிறது. பஞ்சாபில் கிடைத்த வெற்றி தெம்புடன் ஆம் ஆத்மி குஜராத்திலும் தனது கணக்கை ஓபன் செய்யும் திட்டத்துடன் களமிறங்குகிறது. அதேபோல ஒவைசியின் மஜ்லீஸ் கட்சியும் குஜராத்தில் களமிறங்குகிறது. இந்தக் கட்சிகளும் குறைந்தது சில இடங்களை வெல்லும் முனைப்புடன் களம் காண்கிறது.

முதல்முறை
இதன் மூலம் குஜராத்திலுள்ள இஸ்லாமியர்களுக்கு முதல்முறையாக யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்க சில ஆப்ஷன்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு அங்கு வேறு கட்சிகள் இல்லை என்பதால் காங்கிரஸ் கட்சிக்கே இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைத்துள்ளன. வலதுசாரி அரசியல் பிரசாரம் காரணமாக பாஜகவால் அங்குள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற முடியவில்லை. எனவே, இந்தத் தேர்தலில் குஜராத் இஸ்லாமியர்களின் வாக்குகள் எப்படியிருக்கும் என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

10% மக்கள்தொகை
குஜராத்தில் மொத்தம் 6.4 கோடி மக்கள் தொகை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 10 சதவீதம் இஸ்லாமியர்கள். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 42இல் அவர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளனர். இந்த அனைத்து தொகுதிகளிலும் குறைந்தது 40,000 இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. கடந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் இருந்த 3 இஸ்லாமிய எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இந்த முறை மொத்தம் 6 இஸ்லாமிய வேட்பாளர்களைக் காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது.

யாருக்கு வாக்கு
அதேநேரம் இஸ்லாமியர்கள் மிக அதிகமாக இருக்கும் தொகுதிகளைக் குறிவைத்து மஜ்லீஸ் கட்சி 14 பேரை இறக்கியுள்ளது. ஆம் ஆத்மி 3 இஸ்லாமியர்களைக் களமிறக்கியுள்ள நிலையில், பாஜக யாரையும் களமிறக்கவில்லை. குஜராத்தில் கடந்தாண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மியும் மஜ்லீஸ் கட்சியும் ஓரளவு நல்ல இடங்களில் வென்றன.. இதன் காரணமாகவே சட்டசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளன. இருப்பினும், இந்த இரு கட்சிகளுக்கும் இந்த முறை இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைப்பது சந்தேகமே!

சொந்தக் கட்சிக்குள்ளே எதிர்ப்பு
மஜ்லீஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இந்தத் தேர்தலில் களமிறங்குவதில் விருப்பம் இல்லை. அவர்களே ஒவைசியை பாஜகவின் பி டீம் என விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். அக்கட்சியின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் ஷம்ஷாத் பதான், "இப்போது குஜராத்தில் எங்கும் மஜ்லீஸ் கட்சியால் வெல்ல முடியாது. இது நன்கு தெரிந்தே ஒவைசி வேட்பாளர்களை இறக்கியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்குப் பாதகமாகவும் பாஜகவுக்கு சாதகமாகவே அமையும். இதில் இருந்தே அவர் பாஜகவின் பி டீமாக செயல்பட முயல்வது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.

அமைதி
ஆம் ஆத்மி கட்சியை அங்குள்ள இஸ்லாமியர்கள் முதலில் நம்பிக்கையுடன் தான் பார்த்தார்கள். இருப்பினும், பில்கிஸ் பானோ பலாத்கார குற்றவாளிகள் விடுதலையில் கெஜ்ரிவாலின் மவுனம், பிரசாரத்தின் போது அவரது பேச்சுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. 2020இல் கொரோனா பரவ தொடங்கிய சமயத்தில் தப்லிக் ஜமாத் குறித்து அவரது பேச்சின் வீடியோ இப்போது மீண்டும் டிரெண்டாகி ஆம் ஆதமிக்கு எதிராகத் திரும்பிவிட்டது. இதனால் இந்த முறை ஆம் ஆத்மி மற்றும் மஜ்லீஸ் கட்சிகளுக்கு இஸ்லாமியர்கள் வாக்களிப்பது ரொம்பவே சந்தேகம் தான்.

காங்கிரஸ்
அங்குள்ள காங்கிரஸ் கட்சியுடனும் கூட இஸ்லாமியர்களுக்கு மனக்கசப்புகள் தொடரவே செய்கிறது. இருப்பினும், காங்கிரஸ் மீது அவர்கள் முழுமையாக நம்பிக்கையை இழக்கவில்லை. குஜராத்தில் முஸ்லிம்கள், பார்சிகள் மற்றும் யூதர்கள் 11.5 சதவீதம் உள்ளனர். இருப்பினும், குஜராத் அரசில் சிறுபான்மையினர் மேம்பாட்டுத் துறை இல்லை. இதைக் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. அதேபோல இஸ்லாமியர்களின் கல்வி உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும் எனக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள இஸ்லாமியர்கள் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்க வாய்ப்புகள் மிக அதிகம். அதேநேரம் தற்போது வரை வந்துள்ள கருத்துக்கணிப்புகளை வைத்து பார்க்கும் போது, ஒட்டுமொத்தமாக தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications