Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமையலறையையே பயன்படுத்தாத மக்கள்.. குஜராத்தில் இப்படி ஒரு கிராமமா? சுவாரசிய பின்னணி

Subscribe to Oneindia Tamil

காந்தி நகர்: குஜராத்தில் உள்ள சந்தாங்கி எனும் கிராமத்தில் 500 மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்குள்ள அனைத்து வீடுகளிலும் சமையலறை பயன்பாடு கிடையாது. மக்களின் இந்த வினோத பழக்கத்துக்கு என்ன காரணம்? அப்படியென்றால் உணவுக்கு என்ன செய்கிறார்கள்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

பொதுவாக வீடு என்று இருந்தால் சமையலறை, கழிவறை மிகவும் முக்கியம். இது அடிப்படை தேவையாக இருக்கின்றன. இன்னும் சிலர் நவீன சமையலறையை கட்டமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கே ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் சமையலறையை பயன்படுத்துவதே இல்லை.

why-no-kitchen-at-chandanki-village-in-gujarat-details-here

ஆம், நீங்கள் படித்தது சரி தான். குஜராத்தில் உள்ள கிராமத்தில் தான் மக்கள் வீட்டில் சமையலறை பயன்பாடு இன்றி வசித்து வருகின்றனர். அப்படியென்றால் எப்படி சமைப்பார்கள்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு மாற்று யோசனையை முன்வைத்துள்ளனர். அந்த கிராம மக்கள் ஏன் சமையலறையை பயன்படுத்துவது இல்லை? அதன் பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

குஜராத் மாநிலத்தில் சந்தாங்கி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 500 மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சமையலறையை விரும்புவது இல்லை. பொதுவாகவே நாம் நம் வீட்டு சமையலறையில் உணவு சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். ஆனால் அவர்கள் அப்படி விரும்புவது இல்லை.

மாறாக கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இது சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் முதலில் 1,000க்கும் அதிகமான மக்கள் வசித்து வந்தனர். மொத்தம் 1,100 மக்கள் வரை வசித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இளைஞர்கள், இளம்பெண்கள் படித்து வெளியூர், வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விட்டனர்.

கிராமத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. கிராமத்தில் வயதானவர்கள் மட்டுமே வசிக்க தொடங்கினர். இப்போது தற்போது கிராமத்தில் 500 பேர் வரை மட்டுமே வசிக்கின்றனர். இவர்களில் 55 வயது முதல் 85 வயது நிரம்பியவர்கள் மட்டுமே உள்ளனர்.

வயது முதிர்வால் பலரும் பிரச்சனைகளை சந்திக்க தொடங்கினர். இது அவர்களை காயப்படுத்தியது. கிராமம் அழிந்து விடும். கிராம மக்களிடம் இருக்கும் பாசம் மறைந்துவிடும் என்று நினைத்தனர். அதுமட்டுமின்றி அனைவருக்கும் வயதாகிறது என்பதால் கணவன், மனைவியை ஒருவரால் பராமரிக்க முடியாது. அதோடு வீட்டிலும் அவர்களால் சமைத்து சாப்பிடுவது சிரமமான காரியமாக இருக்கிறது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்களுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த முடிவு செய்தனர். அதற்கு அவர்கள் எடுத்த முடிவு தான் கம்யூனிட்டி கிச்சன். வீட்டில் சமையலறையில் சமையல் செய்து சாப்பிடாமல் கிராமத்தில் பொதுவான இடத்தில் ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிட முடிவு செய்தனர்.

இதையடுத்து சமையல்காரர் மூலமாக தற்போது அவர்கள் தினமும் கிராமத்தில் மொத்தமாக சேர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். 2 வேளை அங்கு உணவு வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பதால் சமையலுக்கு ஆள் வைத்து உணவு சமைத்து ஒன்றாக சாப்பிட்டு வருகின்றனர்.

உணவு சாப்பிடுவதற்கு என்று சோலார் பேனல்கள் உதவியுடன் ஏசி அறை அமைத்துள்ளனர். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அறையில் அவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டு வருகின்றனர். இது வெறும் உணவு சாப்பிடும் இடம் மட்டுமின்றி வயதான காலத்தில் தங்களின் இன்பம், துன்பம் உள்ளிட்ட பல உணர்வுகளை மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்ளும் இடமாக மாறி உள்ளது. இது தற்போது கவனம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+