குஜராத் தேர்தல்.. முஸ்லிம்களுக்கு பாஜக ஏன் சீட் தரல? சட்டென செய்தியாளர் கேள்வி -ஜேபி நட்டா விளக்கம்
காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவிடம், இஸ்லாமியர்களுக்கு பாஜக ஏன் குஜராத்தில் வாய்ப்பு அளிக்கவில்லை என்று ஊடகம் கேள்வி எழுப்பியது. இதற்கு ஜேபி நட்டா அளித்த பதிலை விரிவாக காண்போம்.
குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதலளித்து இருக்கிறார்.
அப்போது பேசிய அவர், "நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் எதிராக செயல்படும் சக்திகளை கண்காணிப்பு அரசின் கடமை. மனித உடல்களில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் கெட்ட செல்களை கண்காணிப்பதைபொல் அரசு தேச விரோத சக்திகளை கண்காணிக்க வேண்டும்.

பொதுசிவில் சட்டம்
மேலும் சில சக்திகள் திரைமறைவில் இருந்தபடி செயல்படுகிறார்கள். அதுபோன்றவர்களை கண்டுபிடிக்க வேண்டும். குஜராத்தில் இதற்கு முந்தைய தேர்தல்களிலும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக பாஜக வாக்குறுதி அளித்து உள்ளது. எனவே இந்த பொதுசிவில் சட்டம் அனைவராலும் வரவேற்கப்படுகிறது. வாய்ப்பு உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்." என்றார்.

முஸ்லிம் வேட்பாளர்
அப்போது செய்தியாளர், "குஜராத் மாநிலத்தில் பாஜக ஏன் முஸ்லிம் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தவே இல்லை.?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், எங்கள் கட்சி அனைவருக்குமான வளர்ச்சியை நம்புகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாஜக ஆதரவோடுதான் இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

வெற்றிவாய்ப்பை வைத்தே வேட்பாளர் தேர்வு
அதேபோல் பாஜக முஸ்லிம் ஆளுநர்களையும் நியமனம் செய்து இருக்கிறது. எனவே நாங்கள் அனைவருக்குமான வளர்ச்சியை பின்பற்றுகிறோம். அதேபோல், தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்பது முழுக்க முழுக்க வெற்றி வாய்ப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டது." என்று கூறி இருக்கிறார்.

இலவச திட்டங்கள்
பாஜக வெளியிட்ட குஜராத் தேர்தல் அறிக்கையில் ஏராளமான இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டது குறித்து ஜேபி நட்டாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "எங்களின் திட்டங்கள் அனைத்தும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. ஏழைகள் மற்றும் தேவையானவர்களுக்கு உதவுவதாகும்.

ஏழைகளை வளர்ச்சியடைய வைக்கும் திட்டம்
அவை எல்லாம் இலவசங்கள் கிடையாது. அனைவருக்கும் இலவசம் என்பதுதான் திட்டம். மற்றவர்கள் மக்கள் தொகையில் ஒரு பகுதியினருக்காக இலவசங்களை அறிவிக்கிறார்கள். பாஜகவின் நலத்திட்ட உதவிகள் என்பது ஏழைளை வளர்ச்சியடைய செய்வதே. இதன் மூலம் அவர்களும் இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பவர்களாக ஆவார்கள்." என்றார்.

மும்முனைப் போட்டி
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 8 ஆகிய தேதிகள் 2 கட்டங்களாக மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதற்காக, 3 கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீவிர பிரச்சாரம்
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தற்போது அனைத்துக் கட்சித் தலைவர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தொடங்கி, பல தலைவர்கள் குஜராத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் பங்கெடுத்து உள்ளனர்.
-
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications