தேர்தல் தோல்வி- முதல்வர்கள் ராசி அப்படியாம்-உத்தரகாண்ட் பா.ஜ.க. முதல்வர் தீரத்சிங் ராஜினாமா பின்னணி
: உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி அடைந்துவிடுவோம் என்பதாலேயே தீரத்சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக இருந்த திரேந்திரசிங் ராவத் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் சில மாதங்களுக்கு முன்னர் திரேந்திரசிங் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் பதவியேற்றார்.
பவுரி லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்த நிலையிலேயே தீரத்சிங் முதல்வராக்கப்பட்டார். மாநில முதல்வரான தீரத்சிங் 6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கங்கோத்ரி, ஹால்த் வானி சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

தோற்ற முதல்வர்கள்
இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத்சிங் போட்டியிடலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல்களை சந்திக்கும் முதல்வர்களுக்கு ஒரு ராசி இருக்கிறதாம். 2012-ல் முதல்வராக இருந்த பாஜகவின் பி.சி. கந்தூரி, கோட்வார் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார். 2017-ல் காங்கிரஸ் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத், தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

டெல்லியில் ஆலோசனை
அதேபோல் தாமும் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியைத் தழுவுவோம் என கருதினாராம் தீரத்சிங். இதனையடுத்தே பதவி விலகுவது தொடர்பாக டெல்லிக்கு சென்று ஆலோசனை நடத்தி இருக்கிறார். பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தமது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தீரத்சிங் தெரிவித்தார்.

திடீர் ராஜினாமா
இதனையடுத்து நேற்று நள்ளிரவில் ஆளுநரை சந்தித்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தாராம் தீரத்சிங். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் எஞ்சிய காலத்தில் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட சீனியர் பாஜக தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சத்பால் மகாராஜ், தன்சிங் ராவத், பாஜக ராஜ்யசபா எம்.பி. அனில் பலூனி ஆகியோர் முதல்வர் பதவிக்கான ரேஸில் உள்ளனர். 4 மாதங்களில் 3-வது முதல்வர் என்கிற வரலாறு படைக்கிறது உத்தரகாண்ட் பாஜக.

பாஜக மீது அதிருப்தி
அதேநேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு மீது மக்களிடத்தில் கடும் அதிருப்தி இருக்கிறது. குறிப்பாக கொரோனா பிரச்சனையை உத்தரகாண்ட் அரசு கையாண்டவிதம் கடுமையாக விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. இதனால் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவத்தான் போகிறது. இதனை சரி செய்யும் நடவடிக்கையாகவே தீரத்சிங் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் என்கின்றனர் அம்மாநில சீனியர் பத்திரிகையாளர்கள்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications