திரிபுராவில் 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த சிபிஎம்.. ஏன் இந்த இமாலய சரிவு?
திரிபுராவில் 20 ஆண்டுகளாக இடது சாரிகள் ஆட்சியில் இருந்து வந்த நிலையில் தற்போது அது ஆட்சியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
Recommended Video

அகர்தலா : திரிபுரா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் 2018 சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கடுமையான போட்டியை சந்தித்து விட்டது. தற்போது ஆட்சியையும் இழக்கும் நிலைக்கு அது போய் விட்டது.
திரிபுராவில் பலம் வாய்ந்த கட்சியாக கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த நிலையான ஆட்சிக்கு மற்றொரு முக்கிய காரணம் முதல்வர் மாணிக் சர்க்கார் என்றும் சொல்லாம்.
ஆனால் 2018 சட்டசபை தேர்தல் பாஜக படு விவரமாக, தனி மாநிலம் கோரி போராடும் பழங்குடியினர் கட்சியான ஐபிஎஃப்டி கட்சியோடு கை கோர்த்து மறைமுகமாக மாணிக் சர்க்காருக்கு நெருக்கடி கொடுத்து விட்டது. இதுதான், மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறின. இது தற்போது நடந்து விட்டது.

வேலைவாய்ப்பின்மையால் பின்னடைவா?
நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை அதிக அளவில் இருக்கும் மாநிலம் என்றால் அது திரிபுரா என்று சொல்லப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவில் 19.7 சதவீதம் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. அஸ்ஸாமில் இது 18.1 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அமித்ஷா பிரச்சாரம்
திரிபுராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கடந்த 25 ஆண்டுகளாக வளர்ச்சி என்ற பெயரில் திரிபுராவை மார்க்சிஸ்ட் கட்சி முடக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கவும் இடது சாரி அரசே காரணம் என்றும் அவர் பிரச்சாரத்தை முன்வைத்தார்.

மார்க்சிஸ்டுக்கு நெருக்கடி தரும் பாஜக கூட்டணி
மாணிக் சர்க்கார் அரசுக்கு மற்றொரு நெருக்கடியாக அமைந்தது மலைவாழ் மக்களின் வாக்குகள் பிரிந்தது. தனி மாநிலம் கேட்டு போராடும் ஐபிஎஃப்டியுடன் பாஜக கூட்டணி அமைத்ததும் தேர்தலில் டஃப் வாருக்கு காரணம் என்று கருதப்படுகிறது.

பிரித்த மலைவாழ் மக்கள் ஓட்டுகள்
திரிபுராவின் மலைவாழ் மக்களின் மக்கள்தொகையானது 31 சதவீதமாக இருக்கிறது. மொத்தமுள்ள் 60 சட்டசபை தொகுதிகளில் 20 இடங்கள் எஸ்டி பிரிவினருக்கானதாக இருக்கிறது. கடந்த 2013 தேர்தலின் போது இந்த 20 இடங்களில் 18 இடங்களை சிபிஎம் வென்றது, தற்போது அந்த இடங்களைத்தான் பழங்குடியினர் கட்சியுடன் கூட்டு வைத்து அள்ளி விட்டது பாஜக.

உண்மையான வளர்ச்சி அல்ல
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஸ்திரமானதாக இருந்தாலும் தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ்-பாஜக வாக்காளர்களைக் கவர தீவிர பிரச்சாரம் செய்துள்ளது. 2013ல் பாஜனவிற்கு சில ஆயிரம் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர், ஆனால் தற்போது 2 லட்சம் பேர் இந்தக் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர். திரிபுராவில் 36 லட்சம் மக்கள் தொகை இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் பழங்குடியினரை வளைத்துப் போட்டுத்தான் பாஜக அதன் மீது ஏறி நிற்பதால் இதை உண்மையான வளர்ச்சியாக கருத முடியுமா என்பது சந்தேகம்தான்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications