திருப்பதி கோயில் சம்பிரதாய போஜனம் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்? பின்னணி தகவல்கள்
ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் சோதனை அடிப்படையில் கடந்த மே மாதம் துவங்கப்பட்ட சம்பிரதாய போஜனம் திட்டம், தொடங்கி வேகத்திலேயே மூடுவிழா கண்டுள்ளது.
அந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் வர்த்தகமயமாக்குவதாக விமர்சனங்கள் வலுத்தன. ஆனால், போதிய வரவேற்பு கிடைக்காததால் அந்த திட்டத்தை நிறுத்தியதாக தேவஸ்தான நிர்வாகம் கூறுகிறது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

சம்பிரதாய போஜனம் என்றால் என்ன?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை நெய் உள்ளிட்டவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்டு அவற்றின் மூலம் தயாராகும் பிரசாதம்,. மூலவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது.
இதேபோல, பக்தர்களுக்கும் 'சம்பிரதாய போஜனம்' என்ற பெயரில் இயற்கை விவசாய உற்பத்திப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட உணவு வழங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி திருமலை அன்னமய்யா பவனில் 'சம்பிரதாய போஜனம்' என்ற பெயரில் காலை சிற்றுண்டி, மதியம் உணவு, இரவு உணவு ஆகியவை தயார் செய்து சோதனை ஓட்ட முறையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உணவு வகைக்கான மூலப்பொருட்கள் கோவாவைச் சேர்ந்த நிறுவனம் மூலம் பெறப்பட்டன.
இந்த பிரசாதம் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 2ஆம் தேதிவரை பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்தது.
முற்றிலும் இயற்கை விவசாயம் மூலம் பெறப்பட்ட பொருட்கள் மூலம் சமைக்கப்படும் பிரசாரத்தை பக்தர்கள் சாப்பிட்டால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்றும் பாரம்பரிய உணவு வகையை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி டாக்டர் கே.எஸ். ஜவாஹர் ரெட்டி கூறியிருந்தார்.
நகர்ப்புறங்களில் வாழும் மக்களை விட கிராமப்புறங்களில் வாழும் மக்கள் இயற்கை சார்ந்த வேளாண் பொருட்களை உண்பதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாகவும் இதை விஞ்ஞானிகளே ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் ஜவாஹர் ரெட்டி தெரிவித்திருந்தார்.
லாப நோக்கமின்றி செயல்படுத்தப்படும் இந்த திட்டம் நிரந்தரமாக வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் என்றும் அப்போது அவர் கூறியிருந்தார்.
மூலப்பொருட்களை தயாரிக்க உத்தி
பாலமனேரு புதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோஷாலா என்ற 450 ஏக்கர் கொண்ட நிறுவனம் மூலம் பாரம்பரிய பசுக்களின் இனப்பெருக்கம் நடைபெற நடவடிக்கை எடுத்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம். இயற்கை உரங்கள் நிறைந்த பஞ்சகாவ்யா போன்ற பல வேளாண் பொருட்கள் இங்கிருந்தே உற்பத்தி செய்யப்படுவதாக பிபிசியிடம் பேசிய தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலர் டி. ரவி கூறினார்.
இந்த பொருட்களின் உதவியுடன் தேங்காய் சாதம், புளியோதரை, காய்கறி சூப், வெள்ளரி உள்பட 15 வகை இயற்கை உணவு வகைகள் பக்தர்களுக்கு பரிமாற தேவஸ்தான நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட வாரங்களில் இதற்கு பக்தர்களிடம் இருந்து மிகுந்த வரவேற்பு காணப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த உணவு வகை தயாரிக்க பயன்படும் வெல்லம், பசு நெய், எண்ணெய் என அனைத்துமே இயற்கை தயாரிப்புகள் என்று தேஸ்தான நிர்வாகத்தில் பணியாற்றும் உணவு நிபுணர் ராம்பாபு பிபிசியிடம் தெரிவித்தார்.
அன்னதான திட்டத்துக்கு மாற்றா என சா்ச்சை
இந்த நிலையில், புதிய திட்டம் செயல்வடிவம் பெறத் தொடங்கிய சில நாட்களிலேயே திருமலையில் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டம் வென்காம்பா அன்னபிரசாத பவனில் நீண்ட காலமாகவே செயல்பாட்டில் உள்ளபோது, சம்பிரதாய போஜனம் என்ற பெயரில் ஒரு இலசம உணவு வகை பரிமாறும் திட்டம் தேவைதானா என்று பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
இது குறித்து அப்போதே தேவஸ்தான மக்கள் தொடர்பு அலுவலர் டி. ரவியிடம் கேட்டபோது, "லாப நோக்கமின்றி சம்பிரதாய போஜனம் திட்டம் செயல்படுத்தப்படுவதே நோக்கம். இதை நிரந்தரமாக்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்," என கூறியிருந்தார்.
ஆனால், எந்த பொருட்களின் உற்பத்தியும் அதற்கான உற்பத்தி செலவின்றி இலவசமாகவே கிடைக்காது. அந்த வகையில், அன்னமயா பவனில் நடக்கும் இலவச அன்னதான திட்டமாகட்டும், மே மாதம் அறிமுகமான சம்பிரதாய போஜன திட்டமாகட்டும், அவற்றுக்கும் ஒரு உற்பத்தி செலவை தேவஸ்தானம் வழங்கித்தானே ஆக வேண்டும்.
அன்னமய்யா கட்டடத்தில் இயங்கி வரும் உணவுச்சாலையை தனியார் ஒப்பந்ததாரர் எடுத்து நடத்தி வருகிறார். அங்குள்ள பல அடுக்கு மாடி அரங்குக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக அந்த ஒப்பந்ததாரருக்கு தேவஸ்தானம் ஒரு தொகையை வழங்குகிறது.
அதுபோலவே, சமீபத்தில் அறிமுகமான சம்பிரதாய போஜனம் திட்டத்தை சமைத்துக் கொடுக்கவும் அதில் ஈடுபடும் நிறுவனத்துக்கு ஒரு கட்டணத்தை தேவஸ்தானம் வழங்க வேண்டும். என்னதான் பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தொகையில் இந்த இலவச உணவு வழங்கும் திட்டங்கள் லாப நோக்கமற்றதாக இருந்தாலும், ஒரே மாதிரியான நோக்கத்தில் இரு திட்டங்கள் தேவையா என்ற விமர்சனங்கள் பல தரப்பிலும் முன்வைக்கப்பட்டன.
அன்னதானம் திட்டத்தை மட்டுப்படுத்தி, சம்பிரதாய போஜனா திட்டத்தை ஊக்குவிக்க தேவஸ்தானம் முயல்கிறதா அல்லது சம்பிரதாய போஜனா திட்டத்தை இலவசமாக்கி விட்டு பழைய அன்னதான திட்டத்துக்கு கட்டணம் வசூலிக்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளதா என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்த விமர்சனங்கள் தீவிரமான நிலையிலேயே அது செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட செப்டம்பர் 2ஆம் தேதிக்கு முன்பாகவே அதை நிறுத்தி விடுவதாக அறிவித்திருக்கிறார் தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி.
"திருமலையில் வழங்கப்படும் ஸ்ரீவாரி பிரசாதம் என்பது இலவசமாக இருக்கவ வேண்டுமேயொழிய அது பணத்தை கொடுத்து வாங்கி விநியோகிக்கும் உணவாக இருக்கக் கூடாது. அதனாலேயே புதிய உணவுத் திட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்," என்கிறார் சுப்பா ரெட்டி.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் அந்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் சுப்பா ரெட்டி கேட்டுக் கொண்டார்.
பிற செய்திகள்:
- 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த மனைவி மீது ஆசிட் வீசி கொன்ற கணவர்
- ஆப்கானிஸ்தானில் இருந்து முழுவதும் விலகிய அமெரிக்கா - 20 ஆண்டு போர், 25 முக்கிய தகவல்கள்
- அமெரிக்காவின் தாக்குதலில் குழந்தைகள் பலி: கண்ணீர் வடிக்கும் குடும்பம்
- கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு இதய பாதிப்பு - அறிகுறிகள் என்னென்ன?
- மூக்குதான் மூலதனம்: பல்லுயிர் பெருக்கத்தை காக்க போராடும் மோப்ப நாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications