Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மாநில தேர்தல் முடிவு வந்ததும்! 2 பேரின் அரசியல் வாழ்க்கையே முடிய போகுது! வேட்டு வைத்த சர்வே.. திக்

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்த பின் பெரும்பாலும் 2 பேரின் அரசியல் வாழ்க்கையே முடிவிற்கு வரும்.. அரசியல் வாழ்க்கையில் இந்த தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய அஸ்தமனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன. மிசோரம் - நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம் - நவம்பர் 14ம் தேதி தேர்தல் நடந்தது. ராஜஸ்தான் - நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. சத்தீஸ்கர் - நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடந்தது. தெலுங்கானா தேர்தல் இன்று நடந்தது.

Why will Madhya Pradesh Election 2023 result may end the politics of Kamal Nath and Digvijay Singh?

இதையடுத்து வருகின்றன டிசம்பர் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. அதற்கு முன் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.

மத்திய பிரதேச கணிப்புகள்; மொத்த கணிப்புப்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 93-106 பாஜக 120-134மற்றவை 1-5 இடங்களில் வெல்லும். - அதாவது பாஜக ஆட்சி அமைக்கும். இங்கே 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும் .

மத்திய பிரதேச ஆட்சி வரலாறு: மத்திய பிரதேசம் பொதுவாகவே பாஜக ஆதரவு மாநிலம். குஜராத்திற்கு அடுத்து.. ஏன் குஜராத்தை விட.. பாஜக ஆதரவு அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். பாஜகவின் கோட்டை என்று கூட இதை சொல்லலாம்.

மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கே பெரும்பான்மை பெறுவதற்கு 116 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது.

சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்;

அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வருகிறது: இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் பட்சத்தில்.. கணிப்பில் கூறியுள்ளது போலவே காங்கிரஸ் படுதோல்வி அடையும் பட்சத்தில்.. அது இரண்டு பேரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக மாறும். ஒருவர் கமல்நாத். இன்னொருவர் திக் விஜய் சிங்.

இங்கே காங்கிரசின் முகமாக மூன்று பேர் இருந்தனர். ஒருவர் கமல்நாத். இன்னொருர் திக் விஜய் சிங். இன்னொரு ஜோதிராதித்ய சிந்தியா. இதில் சிந்தியா பாஜக சென்று அமைச்சர் ஆகிவிட்டார். கமல் நாத் ஆட்சியை இழந்ததோடு இல்லாமல்.. தனக்கு இருந்த அரசியல் கிரேஸையும் இழந்துவிட்டார். திக் விஜய் சிங் பெரிதாக ஆக்டிவாக இருப்பது இல்லை.

காங்கிரஸ் முகம் இல்லை: அப்படி இருக்க மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு என்று வலுவான மாநில முகம் கிடையாது. அங்கே மாநில ரீதியாக வலுவாக காங்கிரசை தூக்கி நிறுத்தும் முகம் கிடையாது. ஒருவேளை இங்கே காங்கிரஸ் படுதோல்வி அடையும் பட்சத்தில்.. அது அரசியல் ரீதியாக திக் விஜய் சிங், கமல் நாத் இருவருக்கும் ரிட்டயர்மெண்ட் போலவே பார்க்கப்படும். காங்கிரஸ் வேறு இளம் தலைவர்களை தேடி செல்ல வேண்டும் நிலை ஏற்படும்.

கணிப்பு படியே தேர்தல் முடிவுகள் வந்தால்.. இந்திய அரசியலில் கவனிக்கப்பட்ட இரண்டு அரசியல் தலைவர்கள்.. தங்களின் அரசியலுக்கு முடிவுரை எழுத நேரிடும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+