மீண்டும் ஒரு கள்ளக்காதல் பயங்கரம்.. கணவன், மாமியாரை வெட்டி கூறுபோட்டு.. பிரிட்ஜில் வைத்த பெண்.. ஷாக்
பண மோசடி குறித்த புகாரை விசாரித்த காவல்துறையினருக்கு கலிதா மீது சந்தேகம் எழுந்துள்ளது.
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் மாமியாரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி மனைவி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக குடும்ப வன்முறைகள் என்பது சகிக்க இயலாத அளவுக்கு கொடூரமாக பரிணமித்திருக்கிறது. டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியுடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்த இளைஞர் அப்பெண்ணை கொலை செய்துவிட்டு அதே நாளில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் பெண்ணின் சடலத்தை இளைஞர் பிரிட்ஜில் மறைத்து வைத்திருந்துள்ளார்.
தற்போது அதேபோன்ற சம்பவம் அசாம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் தனது கணவரையும், மாமியாரையும் மனைவி கொலை செய்துள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கரி டே. இவருக்கு அமர்ஜோதி டே எனும் ஒரேயொரு மகன் மட்டும் இருந்திருக்கிறார். இந்நிலையில் அமர் ஜோதிக்கு பந்தனா கலிதா எனும் பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. வழக்கம்போல திருமணமான கொஞ்சம் நாட்கள் வாழ்க்கை கொண்டாட்டங்களுடன் கழிந்திருக்கிறது.

காதல்
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை வெடிக்க தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் தினமும் வீட்டில் பிரச்னை மட்டுமே இருந்திருக்கிறது. எனவே பந்தனா கலிதா மனம் வெறுத்திருக்கிறார். அப்போதுதான் இவருக்கு அருப் தேகா என்பவர் நண்பராகியுள்ளார். வீட்டில் இருந்த அழுத்தத்தால் அருப் தேகாவுடன் அடிக்கடி பேசி வந்த கலிதா ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் கொண்டிருக்கிறார். இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். மருமகளின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த மாமியார் கலிதாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்திருக்கிறார். தொடர் தொல்லையை தாங்க முடியாத கலிதா இனி இந்த வீட்டில் வாழ முடியாது எனும் முடிவை எடுத்துள்ளார்.

புது வாழ்க்கை
இதனையடுத்து கலிதா அந்த வீட்டிலிருந்து வெளியேறி தனியாக தனது காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளார். மறுபுறம் கணவன் அமர்ஜோதி டேயின் உறவினர்கள் அவரை காணவில்லையென்று தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து மனைவி கலிதாவிடம் தீவிர விசாரணை மேற்கொள்கையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

விசாரணை
அதாவது ஆகஸ்ட் 17ம் தேதி வீட்டில் சண்டை பெரியதாக வெடித்த நிலையில் இதனை தாங்கிக்கொள்ள முடியாமல் கணவன் வேலைக்கு சென்ற நேரத்தில் மாமியார் சங்கரி டேவை கலிதா கொலை செய்துள்ளார். பின்னர் அவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வருவதற்கு முன்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்திருக்கிறார். அதேபோல மூன்று நாள் கழித்து கணவர் அமர்ஜோதி டேவை தனது காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொன்றிருக்கிறார். இவரது உடலையும் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்திருக்கிறார்.

கொலை
பின்னர் இருவரும் சேர்ந்து இந்த உடல்களை மேகாலயா காட்டுப்பகுதிக்குள் எடுத்துச் சென்று வீசியுள்ளனர். கணவனும் மாமியாரும் ஒரே நேரத்தில் காணாமல் போனதால் சந்தேகம் தன்மீது திரும்பாமல் இருக்க நூன்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அப்போது எதுவும் கிடைக்கவில்லை. கொஞ்ச நாட்கள் இப்படியே சென்றுக்கொண்டிருந்த நிலையில், மாமியாரின் சகோதரர் தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை முறைகேடாக எடுத்து செலவு செய்துவிட்டதாக கூறி புகார் அளித்துள்ளார். இதுவரை கலிதா தரப்பில் நடந்திருக்கிறது.

புகார்
இதன் பின்னர் பண மோசடி புகார் குறித்து விசாரித்த காவல்துறையினர் புகார் பொய்யானது என்று கண்டுபிடித்துள்ளனர். மேலும், மாமியார் சங்கரி டேயின் வங்கி கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் வரை கலிதாவே எடுத்து செலவு செய்துள்ளது தெரிய வந்தது. இதன் பின்னர்தான் காவல்துறையினரின் சந்தேகம் கலிதா மீது விழத்தொடங்கியது. கலிதாவை பின் தொடர்ந்ததில் அவர்தான் கொலையாளி என கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி கடைசியாக நேற்று அவரை கைது செய்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications