ஆண்மையில்லாதவன் என்று குத்திக்காட்டியே கணவரை ஐஎஸ் தீவிரவாதியாக்கிய பெண்
அகமதாபாத்: நீ ஆண்மை இல்லாதவன், கொடுத்த வேலையை செய்ய முடியாதவன் என்று மனைவி கூறியதால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி கடுப்பாகி தாக்குதல் நடத்த கிளம்பியது தெரிய வந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் வழிபாட்டு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த வாசீம் மற்றும் அவரது சகோதரர் நயீம் ஆகியோரை அம்மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணையில் வாசீம் கூறியிருப்பதாவது,
நான் ஆண்மை இல்லாதவன் என்றும், கொடுத்த வேலையை செய்ய லாயக்கு இல்லாதவன் என்றும் என் மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள். அதனால் தான் கடுப்பாகி என் சகோதரர் நயீமுடன் சேர்ந்து எங்களுக்கு அளிக்கப்பட்ட தாக்குதல் வேலையை செய்ய முடிவு செய்தேன்.
சோடிலா பகுதியில் தாக்குதல் நடத்த சென்றோம். ஆனால் கடைசி நேரத்தில் பயமாக இருந்தது. அடுத்து பாவ்நகர் பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்க முடிவு செய்தோம். அதற்கும் பயமாக இருந்தது. அதனால் எதுவும் செய்யவில்லை.
நானும், என் சகோதரரும் பிக் கேட் மற்றும் ஒன்கோல்ஒன்எயிம் என்ற பெயரை பயன்படுத்தினோம். தாக்குதல் நடத்த உத்தரவிட்டவர் கடக்313 என்ற பெயரில் பேசினார் என்றார்.
இந்நிலையில் வாசீமின் மனைவிக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்தவுடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீவிரவாத தடுப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications