பெரும்பான்மை இல்லைனா! என் அரண்மனையை விற்று பாஜக எம்எல்ஏக்களை வாங்குவேன்! திரிபுரா மன்னர் வாரிசு பரபர
திரிபுரா தேர்தல் நடைபெறும் நிலையில், டெப் பர்மா பாஜக எம்எல்ஏ குறித்து கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுஹாத்தி: திரிபுராவில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் களமிறங்கும் மன்னர் குடும்ப வாரிசான மாணிக்ய டெபர்மா, பாஜக எம்எல்ஏக்களை வாங்குவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த மூன்றும் பாஜக கூட்டணியே ஆட்சியில் இருக்கும் நிலையில், இப்போது தேர்தல் நடைபெறுகிறது.
இதில் மேகாலயா மற்றும் நாகாலாந்திற்கு வரும் பிப். 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், திரிபுரா மாநிலத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திரிபுரா
திரிபுராவில் சட்டசபைத் தேர்தலில் புதிதாக திப்ரா மோதா கட்சி களமிறங்குகிறது.. கடந்த 2019இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த டிஎம்பி கட்சி பழங்குடியின் சமூகத்தினருக்குத் தனி மாநிலமான 'கிரேட்டர் திப்ராலாந்து' கோரிக்கையை முன்வைத்துள்ளது. திரிபுரா மன்னர் வாரிசான பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய டெபர்மா டிஎம்பி கட்சி தலைவராக உள்ளார். முன்பு காங்கிரஸில் இருந்த இவர், அக்கட்சியில் இருந்து விலகி 2019இல் டிஎம்பி கட்சியைத் தொடங்கினார். பழங்குடியினர் மக்களிடையே அவருக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

பழங்குடியினர்
அங்கு மக்கள்தொகையில் சுமார் 32% பேர் பழங்குடியினர் என்பதால் இவரது கட்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென்று எதிர்பார்க்கப்படுகிறது. பழங்குடியினர் அதிகம் இருக்கும் தொகுதிகளைக் குறிவைத்து இவர் பிரசாரம் செய்து வருகிறார்.. மன்னர் வாரிசான இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. 2021 திரிபுரா பழங்குடி கவுன்சில் தேர்தலில் ஆளும் பாஜகவையே தோற்கடித்தார். இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் இவரது கட்சி மொத்தமுள்ள 60 இடங்களில் 42 இடங்களில் போட்டியிடுகிறது.

பாஜகவினரை வாங்குவேன்
அங்குள்ள பழங்குடியினர் ஆதரவு இவருக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்தத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான 31 இடங்கள் கிடைக்கவில்லை என்றால் பாஜக எம்எ்லஏக்களை வாங்குவேன் என்று பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய டெபர்மா கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. திரிபுரா தேர்தலில் தனது கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறினால், பாஜக எம்எல்ஏக்களை வாங்குவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் மற்றும் குதிரை பேரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டெபர்மா, "ஆளும் பாஜகவுக்கு எதிராக இப்போது எனது கட்சி மட்டுமே தனியாக நின்று போராடுகிறது.. 30 இடங்களுக்குக் குறைவான இடங்களில் வென்றால்.. எனது அரண்மனையின் சில பகுதிகளை விற்று பாஜகவிடம் இருந்து 25-30 எம்எல்ஏக்களை வாங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.. இது குறித்தும் நான் சீரியசாக ஆலோசித்து வருகிறேன்" என்றார்.

விளக்கம்
எங்குத் தனது பதில் சர்ச்சையைக் கிளப்பும் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. திடீரென அப்போதே தனது பதிலுக்கான விளக்கத்தையும் அவர் கொடுத்தார். அதாவது, "இங்குப் பணம் தான் அனைத்தும் என்பதைப் போலப் பேசுகிறீர்கள்.. ஏதோ எங்கள் எம்எல்ஏக்களை மட்டுமே அவர்களால் வாங்க முடியும் என்பது போலச் சொல்வது ஏன்? எங்களைப் பற்றி மட்டும் ஏன் கேள்விகள் எழுப்புகிறீர்கள்? பாஜகவில் இருப்பவர்களும் கூட விலைக்கு வாங்கப்படலாம் என்பதை மறக்கக் கூடாது" என்றார்.

திரிபுரா
மொத்தம் 60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டசபையில், கடந்த தேர்தலில் பாஜக கூட்டணி 36 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அங்கு ஆட்சியில் இருந்து சிபிஎம் வெறும் 16 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. இப்போது 5 ஆண்டுகள் கழித்து அங்குத் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜகவுக்கு அதேபோல வெல்வது சந்தேகமே.. ஏனென்றால் கடந்தாண்டு பாஜக கூட்டணியில் இருந்து 8 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மற்ற கட்சிகளில் இணைந்தனர். இது அக்கட்சிக்குத் தலைவலியைக் கொடுத்துள்ளது. இந்தச் சூழலில் தான் அங்குத் தேர்தல் நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications