ஒரு தொகுதி கூட கிடைக்காது..சட்டமன்றத்தில் சவால் விட்ட ஜெகன்! குப்பத்தில் கொடி நாட்டுவாரா சந்திரபாபு?
அமராவதி : ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் சவால் விட்டது போல சந்திரபாபு நாயுடு ஜெயிப்பாரா? அல்லது ஒரு இடம் கூட கிடைக்காமல் உங்கள் கட்சியை தோற்கடிக்க செய்வேன் என்ற ஜெகன்மோகன் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கிறது. ஜூன் ஒன்றாம் தேதி கடைசி கட்ட தேர்தலும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

நாளை மறுநாள் ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 11ஆம் தேதி மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைகிறது. ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது.
ஆட்சியை தொடர வேண்டும் என்ற முனைப்பில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போதைய சூழல் படி யார் ஜெயிப்பார்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பதை கணிக்க முடியாமலேயே இருக்கிறது. அந்த அளவுக்கு ஆந்திர அரசியல் இருக்க காரணம் சாதி செல்வாக்கு தான் சாதி அங்கு ஆட்சியை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ், ஜெகன்மோகன் வருகைக்கு பிறகு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்எஸ் சர்மிளா அவருக்கு எதிராகவே தேர்தலில் களமிறங்கி இருக்கும் நிலையில் போட்டி சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சந்திரபாபு நாயுடு ஜனசேனா மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடுவின் கோட்டையை எப்படியாவது தகர்த்து விட வேண்டுமென தற்போதைய முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி கடுமையாக முயற்சித்து இருக்கிறார். ஆந்திரா மாநிலத்தை பொருத்தவரை குப்பம் சட்டமன்ற தொகுதி தமிழக எல்லையை ஒட்டி இருக்கிறது. இந்த தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகவும் உள்ளது. அதன் காரணமாக வெற்றி வாய்ப்புக்கு இங்கு தமிழர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் 1955ஆம் ஆண்டு இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. 1983லிருந்து என்டி ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியே இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. 1989 முதல் 2019ஆம் ஆண்டு வரை சந்திரபாபு நாயுடு அங்கு தொடர்ச்சியாக ஏழு முறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தற்போதைய தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடு மீண்டும் போட்டுகிற நிலையில் அவரை தோற்கடிக்க ஜெகன்மோகன் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்.
ஆப்ரேஷன் குப்பம் என்ற திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்ட நிலையில் தற்போது அங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பரத் போட்டிருக்கிறார். அவர் அந்த கட்சியின் சீனியரான சந்திர மௌலியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. குப்பம் தொகுதிக்கு ஏற்கனவே பொறுப்பு அமைச்சராக பெத்தரெட்டி ராமச்சந்திர ரெட்டி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் 80 சதவீத இடங்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை கைப்பற்றியிருக்கிறது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் எஃகு கோட்டையாக இருந்த குப்பம் நகராட்சியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கொடி தற்போது பறந்து வருகிறது. இவ்வளவு போட்டி ஏற்பட காரணம் சட்டசபை கூட்டத்தில் ஜெகன்மோகனுக்கும் சந்திரபாபுவிற்கும் ஏற்பட்ட நேரடி மோதல் தான்.
சட்டப்பேரவையில் ஜெகன்மோகன் பேசிய போது அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது. உங்கள் கட்சியை தோற்கடிக்க செய்வேன் என சவால் விட்டார். அதற்கு எதிர் சவால் விடுத்த சந்திரபாபு நாயுடு அடுத்தமுறை முதல்வராக மட்டுமே சட்டப்பேரவைக்குள் நுழைவேன் என கூறிவிட்டு வெளியேறினார். அதன் பிறகு நடந்த சட்டசபை கூட்டத்தில் அவர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாகத்தான் குப்பம் தொகுதியில் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறார் ஜெகன்மோகன். தற்போது அங்கு தெலுங்கு தேசத்திற்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது சந்திரபாபு நாயுடுவிற்கு அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் குப்பம் தொகுதியில் வெற்றி பெற்று ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பேன் என சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். இதன் காரணமாக ஆந்திரா அரசியலில் குப்பம் தொகுதி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications