காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் - தம்பிதுரை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துளளார்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. எனவே மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு படி காவிரி நீரை கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் பங்கிட்டு கொள்வதை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுமார் 4 வார காலம் முடிவடைந்த நிலையில் 29ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்.

தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதுபற்றி அக்கறை காட்டாமல் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று கூறி வருகிறது இந்நிலையில் காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற பட்ஜெட் 2வது கூட்டத் தொடர் தொடங்கியது முதல் அதிமுக எம்பிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து 10 நாட்களாக நாடாளுமன்றத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி எம்பிகள் முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில்
டெல்லியில் அதிமுக எம்பிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக எம்பியுமான தம்பிதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றார். தமிழக அரசு மற்றும் எம்பிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என்று தம்பிதுரை குற்றச்சாட்டினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications