பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் : டெல்லியில் எடப்பாடி பழனிசாமி
வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து வலியுறுத்துவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பத்திரிகையாளர்களிடையே தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு இன்று டெல்லியில் நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தலைமை தாங்கி துவக்கி வைக்கவுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
மேலும், வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த இருப்பதாகவும், இது தொடர்பாக வேறு யாரையும் சந்திக்கும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications