மோர்பி பால விபத்தால் பாஜக அப்செட்.. குஜராத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? கலக்கத்தில் "காவி"
காந்திநகர்: நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள மோர்பி மேம்பால விபத்து, எதிர்வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முறை நடைபெறும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படும் சூழலில், இந்த விபத்தானது அக்கட்சிக்கு பெரும் சவாலையும், பின்னடைவையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதனை உணர்ந்துள்ள பாஜக தலைமை, மோர்பி பால விபத்தை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தும் நெருக்கடியை சமாளிக்க தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடே எதிர்பார்க்கும் குஜராத் தேர்தல்..
முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலானது நாடு முழுவதிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணம், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது என்பதுதான். அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம் என்பதாலும், குஜராத் தேர்தலில் இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை, ஏதேனும் தவறு நடந்து குஜராத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துவிட்டால் அது மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் குஜராத் தேர்தலை மக்களவைத் தேர்தலுக்கு இணையாக பாஜக பார்க்கிறது.

பாஜகவுக்கு சறுக்கல்..?
தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை தனது இருப்புக் கோட்டையாக வைத்திருந்த போதிலும், இந்த முறை அங்கு பாஜகவுக்கு பல்வேறு சவால்கள் நிலவி வருகின்றன. கொரோனா பாதிப்பால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு; குஜராத்தின் முதுகெலும்பாக கருதப்படும் நெசவுத் தொழில் சந்தித்து வரும் பெரும் நஷ்டம் ஆகியவை பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார வீழ்ச்சியும், தொழில் மாநிலமான குஜராத்தை பதம் பார்த்துள்ளது.

மக்கள் அதிருப்தியும் ஆம் ஆத்மி எழுச்சியும்..
இதனால் பாஜக அரசு மீது குஜராத் மக்கள் அதிருப்தியிலும், ஆத்திரத்திலும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, இயல்பாவே, இரண்டு மூன்று முறை தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் ஒரு அரசு மீது மக்களுக்கு ஒருவித அதிருப்தி ஏற்படுவது வழக்கம். அதன்படி, 21 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜக மீதும் குஜராத் மக்களுக்கு அதுபோன்ற அதிருப்தி தற்போது ஏற்பட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பாஜக அரசு மீதான மக்களின் இந்த அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இதில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை பின்னுக்கு தள்ளி ஆம் ஆத்மி தீவிரமாக களப்பணியில் இறங்கியுள்ளது. அங்கு பாஜகவுக்கே போட்டியாக இந்துத்துவா அரசியலை முன்னிலைப்படுத்தி ஆம் ஆத்மி பிரச்சாரத்தில் ஈடுபடுவது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் வெற்றி, டெல்லி மாடல் வளர்ச்சி, கூடவே சேர்ந்துள்ள இந்துத்துவா பிரச்சாரம் ஆகியவை ஆம் ஆத்மிக்கு இந்த முறை பெரிய அளவில் கைகொடுக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மோர்பி பால விபத்து - பெரும் சிக்கல்
குஜராத்தில் இதுபோன்ற சவால்களை சந்தித்து வரும் பாஜகவுக்கு மேலும் பெரும் சிக்கலை தந்துள்ளது மோர்பி கேபிள் பால விபத்து. இந்த விபத்தில் இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், எஃப்.சி. வாங்காமலேயே பாலத்தை திறந்தது உள்ளிட்ட முறைகேடுகளும் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. மேலும், பாலத்தை புனரமைத்ததில் பெரும் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸும், ஆம் ஆத்மியும் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடர்பான பல விஷயங்களும் இனி வெளிவரக்கூடும் என்பதால் பாஜக பெரும் கலக்கத்தில் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெரிய அளவில் அப்செட்டில் உள்ளதாக எனவே, இந்த விபத்து தொடர்பாக இனி எதிர்க்கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக பாஜக முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மோர்பி பால விபத்தால் பாஜக மீதான குஜராத் மக்களின் அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications