விவசாயிகளின் நண்பேன்டானு நிரூபித்த காங்! பாஜகவை நோட் செய்ய வைத்த சத்தீஸ்கர் தேர்தல் அறிக்கை
ராய்ப்பூர்: பாஜகவை விட சூப்பர் டூப்பர் வாக்குறுதிகளை கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கரில் மீண்டும் ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதாவது நவம்பர் 7, 17 ஆகிய இரு தேதிகளாகும். இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

அது போல் 11 லோக்சபா தொகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 46 இடங்களில் வென்றால் அந்த கட்சியே ஆட்சியை அமைக்கும்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. வெறும் 15 இடங்களில் வென்று பாஜக தோல்வி அடைந்தது. 5 தொகுதிகளில் வென்றது முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் கட்சி. அந்த வகையில் இந்த முறை பாஜக, காங்கிரஸுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
அப்படிப்பட்ட நிலையில் பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் அட்டகாசமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- ஜாதிவாரி கணக்கெடுப்பு
- விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி
- மகளிர் சுய உதவிக்குழுக்களன் கடனும் தள்ளுபடி
- எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ 500 மானியம்
- எல்கேஜி முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி
- குவிண்டாலுக்கு ரூ 3200 க்கு நெல் கொள்முதல்
- 200யூனிட்டுகள் மின்சாரம் இலவசம்
- மகளிருக்கு ஆண்டுக்கு ரூ 15 ஆயிரம் வழங்குவது
என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவே கருதப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை சூடுபிடித்து காங்கிரஸ் முன்னணி வகித்து வருகிறது. இதனால் தேர்தல் கதாநாயகன் காங்கிரஸின் தேர்தல் அறிக்கைதான் என்பது தேர்தல் முடிவுகள் வரவரத் தெரிகிறது. எனினும் பாஜக, விடாமல் காங்கிரஸை துரத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications