Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிரும் "இந்தியா" கூட்டணி.. காங்கிரசை யார் நம்புவார்கள்? அகிலேஷ் யாதவ் ஒரே போடு.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

இம்பால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்ததாக அதிருப்தி தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், இப்படியே போனால் காங்கிரசை யார் நம்புவார்கள் என தனது வேதனையை தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவின் இந்த கருத்து இந்தியா கூட்டணியில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்றது. எனினும், பாஜக நடத்திய ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுடன் கை கோர்த்தார்.

 Will think about alliance for the Lok Sabha polls says akilesh yadav slams Congress

இதன் காரணமாக மத்திய பிரதேசத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் பாஜக ஆட்சி அமைத்தது. அங்கு முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்த நிலையில், அம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

நெருங்கும் சட்டசபை தேர்தல்: மத்திய பிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை பிடிக்க காங்கிரசும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என்று சொல்கின்றன. இதனால், தற்போதே தேர்தல் களம் அனல் பறக்கிறது.

காங்கிரஸ் - சமாஜ்வாடி மோதல்: இது ஒருபுறம் இருக்க லோக்சபா தேர்தலும் விரைவில் நடைபெற இருப்பதால் அதற்கு முன்னோட்டமாகவும் இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. லோக் சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துடன் கை கோர்த்துள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் நாடு முழுவதும் ஒருங்கிணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.

எனினும், இந்தியா கூட்டணி தேர்தலுக்கு முன் சிதறும் எனவும் பாஜக தலைவர்கள் விமர்சிக்காமல் இல்லை. இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்குள் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் அதிருப்தி: மத்திய பிரதேசத்தில் பிரதான கட்சியாக உள்ள காங்கிரஸ் அங்குள்ள 230 தொகுதிகளிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. ஆனால், சமாஜ்வாடி கட்சி 5-6 இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறது. ஆனால் இதற்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், சமாஜ்வாடி கட்சி தனியாக வேட்பாளரை அறிவித்தது. அண்மையில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த நிலையில், மேலும் 22 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மொத்தம் 31 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. இதில், 13 தொகுதிகளில் காங்கிரசுக்கு எதிராகவே சமாஜ்வாடி வேட்பாளர்களை அறிவித்துள்ளது இந்தியா கூட்டணிக்கு தலைவலியை கொடுத்துள்ளது. மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேயான மோதலை அப்பட்டமாக வெளியாக்கியது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

யார் நம்புவார்கள்?: கூட்டணி விவகாரத்தில் 'இந்தியா' கூட்டணியை காங்கிரஸ் கட்சி முட்டாளாக்குகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்து வந்தால் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து முடிவு எடுக்க நேரிடும் என்றார். மேலும் அவர் கூறுகையில், "மத்திய பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தங்களுக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்வதற்கு காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் அதனை முன்பே சொல்லியிருக்க வேண்டும்.

"இந்தியா" கூட்டணி என்பது தேசிய அளவிலானது என்றும் அது லோக்சபா தேர்தலுக்கானது மட்டுமே என்பதும் எங்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இவ்வாறு நடந்துகொண்டால் அவர்களை யார் நம்புவார்கள்?.. பாஜகவுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்துள்ள நிலையில் இப்படி நடந்துகொண்டால் நம்மால் வெற்றி பெறவே முடியாது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+