268 ஊழியர்கள்தான்.. 12 மாடியி்ல் ஆபீஸ்.. உட்காருவதற்கு ஆளுக்கு 840 சதுர அடி இடம்!
டெல்லி: ஏர் இந்தியா டவன்.. இனி டவுட்டுதான்.... சம்பள பாக்கி.. ஊழியர்கள் ஸ்டிரைக் என்று ஏகப்பட்ட அக்கப்போர்கள், நிதிப் பிரச்சினைகள் சுற்றி சுழன்று அடித்துக் கொண்டிருநதாலும் மும்பயையில் உள்ள ஏர் இந்தியா அலுவலகத்தின் பிரமாண்டக் கட்டடத்தில் வெறும் 268 ஊழியர்கள் மட்டும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஒரு பிளாட் சைஸுக்கு இடம் கொடுத்து வைத்துள்ளனர்.
இங்கு பணியாற்றும் 268 ஊழியர்களுக்கும் ஆளுக்கு தலா 840 சதுர அடி இடத்தை ஒதுக்கிக் கொடுத்து தனது தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளது ஏர் இந்தியா. இந்த இடமானது, ஒரு டூ பெட்ரூம் அபார்ட்மென்ட் சைஸிலானது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 24 மாடிகளைக் கொண்ட கட்டடம் இது. நாரிமன் பாயிண்ட்டில் இந்த கட்டடம் உள்ளது.

என்னா ஒரு ஆபீஸு....
இப்படி ஒரு விசாலமான ஆபீஸ் ரூம் எந்த ஒரு ஊழியருக்கும் நிச்சயம் கிடைக்காது என்று பொறாமைப்பட்டுக் கூறும் வகையில் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு அலுவலகத்தில் இடம் கொடுத்துள்ளனர்.

14 மாடிகள் நமக்குத்தான்
இந்த 24 மாடிகளைக் கொண்ட கட்டடத்தில் 14 மாடிகளை ஏர் இந்தியா எடுத்துள்ளது.

வழக்கம் போல ஆர்டிஐதான்...
வழக்கம் போல ஆர்டிஐ விசாரணை மூலம் இந்தத் தகவலை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

ஒரு புளோருக்கு 19 பேர்தான்...
இந்த அலுவலகத்தில் ஒரு தளத்திற்கு சராசரியாக 19 ஊழியர்கள்தான் பணியில் உள்ளனராம்... எவ்வளவு காத்தோட்டம்...

ஒவ்வொரு தளமும் 16,000 சதுர அடி
இங்குள்ள ஒவ்வொரு தளமும் சராசரியாக 16,000 சதுர அடி பரப்பளவிலானது.

மொத்தம் 3,88,310 சதுர அடி
கட்டடத்தின் மொத்த பரப்பளவு 3 லட்சத்து 88 ஆயிரத்து 310 சதுர அடியாகும்.

முன்னாடி 2000 பேர் இருந்தாங்களாம்...
ஏர் இந்தியா நல்ல நிலையில் இருந்த போது இந்தக் கட்டடத்தில் 1500 முதல் 2000 பேர் வரை பணியாற்றினார்களாம்.

வர வர மாமியார்...
ஆனால் தற்போது ஊழியர்கள் எண்ணிக்கை அடியோடு குறைந்து போய் விட்டது. தற்போது வெறும் 268 பேர்தான் பணியாற்றுகின்றனர். கடந்த மார்ச் மாதம் 300 பேர் இருந்தனராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications