மத்திய அமைச்சர் மேல் பாலியல் புகார் அளித்த பெண் பிரதமரை சந்திக்க விருப்பம்
டெல்லி: மத்திய அமைச்சர் நிகல் சந்த் மீது பாலியல் புகார் அளித்திருந்த இளம்பண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சிர்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர்.
திருமணத்திற்கு பின் தனது கணவருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் குடியேறினார்.
கணவரே ஈடுபடுத்தினார்:
ஜெய்ப்பூரில் வைஷாலி நகர் உள்பட பல இடங்களில் அவர்கள் வசித்தனர். அப்போது அவரது கணவர் அப்பெண்ணை தவறான வழியில் பயன்படுத்தி உள்ளார். நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்துள்ளார்.
போலீசில் புகார்:
கணவர் மற்றும் நண்பர்களின் கொடுமை தாங்காமல் அவர் அங்கிருந்து தப்பி போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவரும், அவரது நண்பர்களும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் உணவில் விஷம் வைத்து கொல்ல முயற்சிப்பதாகவும் கூறியிருந்தார்.
அரசியல் பின்னணி:
ஆனால் அரசியல் பின்னணி காரணத்தால் இந்தப் புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட அப்பெண் நீதிமன்றத்தில். வழக்கு தொடர்ந்து அதில் கணவர் உள்பட 17 பேர் மீது புகார் கூறியிருந்தார்.
அமைச்சரும் அடக்கம்:
மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் 17 பேரும், ஆகஸ்ட் மாதம் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. அப்பெண் குற்றம் சாட்டிய 17 பேரில் மத்திய அமைச்சர் நிகல்சந்த்தும் ஒருவர். அவரை பிரதமர் மோடி மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
மகளிர் அமைப்பினர் கோஷம்:
நேற்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகளிர் அமைப்பினர் பா.ஜ.க தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பெண்ணுக்கு ஆதரவாகவும், அமைச்சரை நீக்கவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர்.
பெண்மணி கோரிக்கை:
இந்நிலையில் அமைச்சர் மீதான புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பிரதமர் மோடியை சந்திக்க 2 நிமிட நேரம் வாங்கி தந்து யாரேனும் உதவவேண்டும் என அப்பெண் கேட்டுகொண்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications