"என்னை விட்டுடு.. கல்யாணமாயிடுச்சு... குழந்தையும் இருக்கு" கெஞ்சிய டீச்சரை உயிருடன் கொளுத்திய கொடுமை
கல்லூரி பேராசிரியையை உயிருடன் நபர் ஒருவர் கொளுத்தி உள்ளார்
Recommended Video
புனே: பட்டப்பகலில் காலேஜ் வாசலிலேயே பேராசிரியை ஒருவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது!
மகாராஷ்ரா மாநிலம் வார்தா பகுதியில் ஒரு கல்லூரி இயங்கி வருகிறது.. இங்கு பேராசிரியையாக வேலை பார்க்கிறார் ஒரு இளம்பெண்.. வயது 25!

காலேஜுக்கு டீச்சர் வழக்கமாக பஸ்ஸில்தான் வந்துபோவார்.. பிறகு பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கி ஹிங்னகாட் நகரில் கொஞ்ச தூரம் நடந்து செல்வார்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் நடந்து போனார்.. காலேஜ் வாசலில் சென்றபோது திடீரென ஒரு இளைஞர் பைக்கில் வந்து வழி மறித்தார்.
திடீரென கையில் கொடு வந்திருந்த பெட்ரோலை எடுத்து டீச்சர் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.. உடம்பெல்லாம் தீப்பற்றி அலறினார்... அந்த வழியாக சென்று கொண்டிருந்த பஸ்ஸில் இருந்த பயணிகள் இதை பார்த்து உடனடியாக இறங்கி ஓடிவந்தனர்.. அந்த பகுதியில் இருந்த தண்ணீரை அள்ளி கொண்டு வந்து டீச்சர் மீது ஊற்றி அணைத்தனர்.
பின்னர் படுகாயங்களுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு போய் அனுமதித்தனர்.. அதற்குள் ஆசிரியையின் உடம்பெல்லாம் கருகிவிட்டது.. இப்போது ஆபத்தான முறையில் சிகிக்சை பெற்று வருகிறார்.. இது சம்பந்தமான விசாரணையை போலீசாரும் துவங்கி உள்ளனர். அப்போது டீச்சருக்கு கல்யாணம் ஆகி 7 மாதத்தில் ஒரு குழந்தை உள்ளதாம்.
ஆனால் கல்யாணம் ஆனது தெரிந்தும் விக்கி நாக்ரலே என்பவர் டீச்சரை விரட்டி விரட்டி காதலித்து லவ் டார்ச்சர் தந்துள்ளார். தனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது என்று பலமுறை சொல்லியும் அந்த இளைஞர் கேட்கவே இல்லையாம்.. தன்னை காதலிக்கும்படி, கல்யாணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.. இதற்கு தொடர்ந்து ஆசிரியை மறுப்பு சொல்லவும், இந்த ஆத்திரத்தில்தான் வழக்கமாக செல்லும் பாதையை தெரிந்து வைத்து கொண்டு பைக்கில் வந்து பெட்ரேலை ஊற்றி எரித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் இதனை தெரிவித்த போலீசார் தொடர் விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.. லவ் டார்ச்சர் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காலேஜ் வாசலிலேயே டீச்சரை உயிருடன் எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
தமிழ்நாட்டில் விபச்சாரத்திற்கு அனுமதி தர வேண்டும் - மஎஜக தலைவர் காயல் அப்பாஸ் வைத்த கோரிக்கை! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா?












Click it and Unblock the Notifications