என் கணவரே எம்எல்ஏவுக்கு என்னை விருந்தாக்கினார்.. சித்ரவதை தாங்கமுடியாமல் போலீஸில் கதறிய பெண்!
தன்னை பலாத்காரம் செய்ய தனது கணவரே எம்எல்ஏவுக்கு உதவியதாக புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திஸ்பூர்: எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸில் புகார் கூறிய பெண் ஒருவர், இதற்கு தனது கணவரே எம்எல்ஏவுக்கு உதவியதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக எத்தனை சட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் உள்ளது.
ஒவ்வொரு சம்பவத்தின் போதும் கண்டனம் தெரிவிப்பதும் சூட்டோடு சூடாக போராட்டம் நடத்துவதுமே மட்டுமே வாடிக்கையாக உள்ளது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடராத வகையில் நிரந்தர தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.

கணவர் உதவியுடன் பலாத்காரம்
கட்டிய கணவர் உடன் பிறந்த சகோதரன், பெற்ற தந்தை என பல உறவுகளாலும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தற்போது அதிகரித்துவிட்டது. இந்நிலையில் அசாமில் திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் உதவியுடன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ மீது புகார்
அசாம் மாநிலத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் நிஜாம் உத்தின் சவுத்திரி. இவர் மீதுதான் அசாம் மாநிலம் ஹைலகண்டி போலீஸ் நிலையத்தில் பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் ஒன்றை கூறியுள்ளார்.

கடந்த மாதம் 2 முறை
அதில் தனது கணவர் துணையுடன் எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி தன்னை கடந்த மே மாதம் இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். மே 19 ஆம் தேதியும் மே 23ஆம் தேதியும் எம்எல்ஏ தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.

தற்கொலை முயற்சி
மேலும் எம்எல்ஏ தன்னை கவுகாத்திக்கு கடத்திச் செல்ல எம்.எல்.ஏ. முயன்றதாகவும், தான் தற்கொலைக்கு முயன்றதால் அந்த முயற்சியை எம்எல்ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி கைவிட்டதாகவும் கூறியுள்ளார்.

எம்எல்ஏ மறுப்பு
இதுதொடர்பாக ஹைலகண்டி போலீசார் எம்.எல்.ஏ நிஜாம் உத்தின் சவுத்திரி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை எம்.எல்.ஏ. நிஜாம்உத்தின் சவுத்திரி மறுத்துள்ளார்.

தனக்கு எதிரான சதி
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் தனக்கு எதிரான சதி என்றும் கூறியுள்ளார். மேலும் குடும்ப பிரச்சனை காரணமாக அந்த பெண்தான் அவரது கணவருடன் தன்னை சந்தித்ததாகவும் அவருடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் நிஜாம் உத்தின் சவுத்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு எம்எல்ஏ
ஏற்கனவே உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில் எம்எல்ஏ ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது திருமணமான பெண் ஒருவர் மேலும் ஒரு எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications