மும்பை அருகே நடு ரோட்டில் பெண் போலீஸ்காரரை அடித்து மூக்கை உடைத்த சிவசேனை பிரமுகர்
மும்பை: நடு ரோட்டில் பெண் போலீசை சிவசேனா பிரமுகர் அடித்து உதைத்த சம்பவம் வீடியோ காமிராவில் பதிவாகி வைரலாக பரவியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரை சேர்ந்தவர்ர் சசிகாந்த். சிவசேனா பிரமுகர். இவர் நேற்றுமுன்தினம் தனது ஸ்கார்பியோ காரில், கிழக்கு எக்ஸ்பிரஸ் சாலையில் போனில் பேசியபடியே சென்றுள்ளார். இதனைக் கவனித்த பெண் போக்குவரத்துக் காவலர், காரை நிறுத்தும்படி சைகை காட்டியுள்ளார்.
காரை வழி மறித்ததால் சசிகாந்த்துக்கு கோபம் வந்துவிட்டதாம். எனவே, காரைவிட்டு இறங்கி அந்த பெண் காவலரின் கன்னங்களில் மாறி மாறி அறைவிட்டார்.
இந்த எதிர்பாராத தாக்குதலால், பெண் போலீஸின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. இந்த தாக்குதலைக் கண்டித்து குறுக்கிட்ட வக்கீல் ஒருவருக்கும் அடி உதை விழுந்துள்ளது.
இந்தக் காட்சிகள் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவிலும் பதிவாகியதால் தற்போது அந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சசிகாந்தை கைது செய்து தானே மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications