ம.பியில் பெண் பாலியல் பலாத்காரம்: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை செய்த கணவன்- 10 பேர் கைது
போபால்: மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் உள்பட 10 பேரால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தை உலுக்கியுள்ள இந்தச் சம்பவம் குறித்து அம்மாநில போலீஸார் வெளியிட்ட தகவல்கள்:
'பிப்லாட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பிலாய் கேதா என்ற இடத்தில் கடந்த 10ம் தேதியன்று பாழங்குடியினப் பெண்ணை கணவரே தனது உறவினர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.
வன்கொடுமைக்குப் பின்னர் மகனின் கண் முன்னால் நிர்வாணக் கோலத்தில் வலம்வரச் செய்யப்பட்ட அந்தப் பெண், பலவந்தமாக சிறுநீர் அருந்த கட்டாயப்பட்டுத்தப்பட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தவர்கள், உறவினர்களின் துணையுடன் கந்த்வேடா மாவட்ட மருத்துவமனையில் அந்தப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ஜூன் 13-ல் தனக்கு நடந்த கொடுமைகளை முறைப்படி போலீஸில் புகார் அளித்தார்.
நிர்வாண கோலத்தில்
தனது கணவர் உள்பட 10 பேரால் தாம் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், தன் இளம் வயது மகனின் முன்னிலையில் நிர்வாண கோலத்தில் உலவவிடப்பட்டதாகவும் தனது புகாரில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். அத்துடன், தாகத்துக்குத் தண்ணீர் கேட்ட தன்னிடம், சிறுநீர் அருந்தக் கட்டாயப்படுத்தியதாகவும் அவர் தனது புகாரில் விவரித்துள்ளார்.
கணவர் கைது
அந்தப் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரது உறவினர்கள் உள்பட 10 பேரை சனிக்கிழமை போலீஸ் கைது செய்தது.
வன்கொடுமை வழக்குப் பதிவு
கூட்டுப் பாலியல் பலாத்காரம், வன்கொடுமைக்கு ஆளாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்று மத்திய பிரதேச போலீஸார் தெரிவித்தனர்.
முன்விரோதம்
இதனிடையே, நிலத் தகராறு காரணமாகவே, முன் விரோதம் காரணமாக, தனது மனைவியும், அவரது உறவினர்களும் பொய் வழக்கு போட்டுள்ளதாக, அந்தப் பெண்ணின் கணவர் கூறியிருக்கிறது.
மருத்துவபரிசோதனை
தற்போது, மருத்துவப் பரிசோதனைக்கும், சிகிச்சைக்காகவும் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச நிகழ்வு, பொள்ளாச்சி பயங்கரத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications