ஆந்திராவில் ஓடும் காரில் பெண் பலாத்காரம்: கத்தியால் குத்தி கீழே வீசிய கொடூரம்!
நகரி: ஆந்திராவில் பெண்ணை கடத்திச் சென்று ஓடும் காரில் நான்கு நாட்கள் பலாத்காரம் செய்த கொடூரர்கள், கத்தியால் குத்தி சாலையில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 42 வயது பெண்மணியை கடந்த 4 நாட்களுக்கு முன்பு நெல்லூரைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி சென்றுள்ளது.

பெண்ணை கடத்திய அந்த கும்பல், அவரை 4 நாட்களாக காரிலேயே பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், ஓடும் காரிலேயே அந்த பெண்ணை 4 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
அந்த பெண், வாரங்கல் மாவட்டம் பன்றினி என்ற இடத்தில் காரில் இருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால், அந்த கும்பல் அவரை தப்பவிடாமல் கத்தியால் சரமாரியாக குத்தி காரில் இருந்து வீசிவிட்டு சென்றுள்ளனர். வயிற்றில் பல இடங்களில் கத்தி குத்துப்பட்ட அந்த பெண், குற்றுயிராக சாலையில் கிடந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையோரத்தில் கிடந்த அந்த பெண்ணை கண்ட அந்தப் பகுதிவாசிகள் உடனடியாக அவ்ரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
நினைவு திரும்பாத நிலையில் அந்த பெண், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், அந்தப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், பெண்ணை பலாத்காரம் செய்த கும்பலை தீவிரவமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications