29 வருஷமாக தொல்லை கொடுத்த உயர் அதிகாரி.. பேஸ்புக்கில் கொட்டித் தீர்த்த பெண் ஐபிஎஸ் அதிகாரி!
திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே காவல்துறை உயரதிகாரிகளுக்கும், பெண் அதிகாரிகளுக்கும் இடையே கசப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இப்படி உயரதிகாரி ஒருவரால் 29 ஆண்டுகளாக தொந்தரவுக்கு ஆளாகி வருவதாக பெண் காவல்துறை உயரதிகாரி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறையிலேயே சில கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் மட்டுமே இந்த கறுப்பு ஆடுகளை எதிர்கொண்டு தாக்கு பிடிக்கின்றனர். நேர்மையாக இருக்கும் சிலரோ கறுப்பு ஆடுகளின் டார்ச்சரை தாங்க முடியாமல் மனஉளைச்சலுக்கு ஆளாகி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடுமுழுவதுமே காவல்துறை உயரதிகாரிகளுக்கும், பெண் அதிகாரிகளுக்கும் இடையே கசப்புணர்வு இருக்கத்தான் செய்கிறது. இப்படி உயரதிகாரி ஒருவரால் 29 ஆண்டுகளாக தொந்தரவுக்கு ஆளாகி வருவதாக பெண் காவல்துறை உயரதிகாரி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உயரதிகாரியின் மீது குற்றப்பத்திரிக்கை வாசித்துள்ள பெண் காவல்துறை அதிகாரியின் பெயர் ஸ்ரீலேகா. கேரளா மாநிலத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர்தான் தனது உயரதிகாரியான கேரள மாநிலத்தின் போக்குவரத்து ஆணையர் டோமின் தச்சங்கரி மேல் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ரீலேகா,55 , தற்போது மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தலைவராக உள்ளார். இவர், தனது பேஸ்புக் பக்கத்தில், கடந்த 1987-ம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வுக்கு நான் பயிற்சி பெற்ற காலத்தில் இருந்தே தச்சங்கரி எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார். அவரது தொல்லைகளைக் கடந்த 29 ஆண்டுகளாகத் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எனக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்கு ஊழல் கண்காணிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து ஆணையராக நான் பதவி வகித்த காலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து ஒன்றுக்கு உரிமம் வழங்கியபோது நான் லஞ்சம் வாங்கியதாக என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இது, என்னை வழக்கில் சிக்கவைப்பதற்காக, தச்சங்கரி தீட்டியிருக்கும் சதித் திட்டமாகும். அதே நேரத்தில், அரசுக்கு எதிராகவோ, நீதிமன்றத்துக்கு எதிராகவோ அல்லது காவல் துறைக்கு எதிராகவோ எதுவும் நான் கூறவில்லை" என்றும் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தச்சங்கரி, "யாருக்கு யார் தொல்லை கொடுக்கிறார்கள் என்பதை துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்; ஸ்ரீலேகாவுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறேன்'' என்று பதிலளித்துள்ளார்.
Kerala IPS officer Sreelekha alleges harassment by fellow ADGPThiruvananthapuram: ADGP (State Crimes Records Bureau) R...
Posted by JKLIX on Monday, February 1, 2016
காவல்துறை உயரதிகாரிகளிடையே நடக்கும் மல்லுக்கட்டு மலையாள தேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications