கெஜ்ரிவால் ஆட்சியில் டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் நண்பரால் பாலியல் பலாத்காரம்
டெல்லி:
டெல்லியில் 34 வயது பெண் பத்திரிக்கையாளர் தனது நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் பூஜா(34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). விவாகரத்தான அவர் தனது 8 வயது மகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். அவர் ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். பத்திரிக்கையாளரான பூஜா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கிளப்பில் 38 வயது ஆண் ஒருவரை சந்தித்துள்ளார். அவர்கள் நண்பர்களாகியுள்ளனர்.
சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பூதை டெல்லி வசந்த் கஞ்ச் பகுதி காவல் நிலையத்தில் சனிக்கிழமை இரவு புகார் அளித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அந்த நபரை தேடி வருகிறார்கள். அந்த நபரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நான் ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் பாலியல் பலாத்காரங்களை தடுத்து நிறுத்துவேன் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் முதல்வராக உள்ள டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications