மும்பையில் 16வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
மும்பை: மும்பையில் 35 வயது பெண் ஒருவர் 16வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் இருக்கிறது லோகந்த்வாலா காம்பிளக்ஸ் பகுதி. அந்த பகுதியில் இருக்கும் கிரீன் ஏக்கர்ஸ் அபார்ட்மென்ட்டில் 16வது மாடியில் வசித்து வந்தவர் ஏக்தா பாபர்(35). அவரது தந்தை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து ஏக்தா தனது தாயுடன் அந்த அபார்ட்மென்ட்டில் வசித்து வந்தார். மன அழுத்தத்தில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு தனது வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அந்த சமயம் ஏக்தாவின் தாய் படுக்கையறையில் இருந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு நடிகர், நடிகைகளை அனுப்பி வைக்கும் வேலை பார்த்து வந்தார் ஏக்தா. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வேலை இன்றி இருந்த ஏக்தா மிகவும் கவலையுடன் காணப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications