அண்ணன் - தம்பியை திருமணம் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டா ஆடிப்போயிடுவீங்க.. அடடா
சிம்லா: இப்போது சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியுமா? ஆம் முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் ஊரைகூட்டி மேளதாளங்கள் முழங்க சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இந்த சம்பவம் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
கணவர் இருக்கும்போது ஒரு பெண் 2 ஆணையோ, மனைவி இருக்கும்போது ஒரு ஆண் 2 பெண்ணையோ திருமணம் செய்வது நம் நாட்டின் சட்டப்படி குற்றமாகும். இதுபற்றி கேட்டதற்கு எங்களுக்கு ஒன்றும் இது புதிது அல்ல.

காலம் காலமாக எங்கள் கிராமத்தில் இந்த வழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்கின்றனர் அந்த மக்கள். இப்படி சகோதரர்கள் 2 பேர் ஒரு பெண்ணை திருமணம் செய்யும் வழக்கம் எங்கு உள்ளது? அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிராமார் மாவட்டத்தை ஷில்லை கிராமத்தை சேர்ந்தவர் பிரதீப் நெகி. இவரது சகோதரர் பெயர் கபில் நெகி. இவர்கள் ஹட்டி பழங்குடியினத்தை சேர்ந்தவர். இங்கு ஒரு பெண்ணை சகோதரர்கள் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. அதன்படி பிரதீப் நெகி - கபில் நெகி சகோதரர்களுக்கு திருமண ஏற்பாடு நடந்தது.
இவர்களுக்கும் குன்ஹாட் கிராமத்தை சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இவர்களின் திருமணம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அவர்களின் பாரம்பரிய முறைப்படி நடந்து முடிந்துள்ளது. சுனிதா சவுகான் என்ற இளம்பெண் பிரதீப் நெகி மற்றும் கபில் நெகி ஆகியோரை கரம் பிடித்தார்.
இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது விவாதத்தை கிளப்பி உள்ளது. நம் நாட்டில் ஒருவர் 2 திருமணம் அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வது சட்டப்படி குற்றம். ஆனால் இங்கு பெண் ஒருவர் 2 சகோதரர்களை திருமணம் செய்துள்ளாரே? என்று பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் மணப்பெண் சுனிதா கூறுகையில், ‛‛எனக்கு யாரும் பிரஷர் தரவில்லை. இந்த திருமணம் எனது தேர்வு'' என்று தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்றாலும் கூட இமாச்சல் பிரதேசம், அண்டை மாநிலமான உத்தரகாண்ட்டில் இன்னும் கூட ஒருவர் 2 திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. சில கிராமத்தில் இந்த நடைமுறை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. தற்போது ஓரளவு மறைந்தாலும் கூட இன்னும் சில கிராமங்களில் நடந்து வருகிறது. இந்த ஹட்டி பழங்குடியினரை எடுத்து கொண்டால் 2 ஆண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது. இதன்மூலம் ஒரு கணவருக்கு ஏதாவது சூழ்நிலையில் வந்தால் இன்னொருவர் மூலமாக திருமண உறவு உயிர்ப்புடன் இருக்கும். இது அவர்களின் காலாசாரமாக தொடர்ந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications