ஜார்கண்ட்: கெட்ட சக்தி விலக மகளுக்கு நாயுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்!
ராஞ்சி: கிளியை வளர்த்து பூனை கையில் கொடுப்பதா? என்று கேட்பார்கள். ஆனால் அழகான இளம் பெண்ணை நாய்க்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி, அவளுக்கு பிடித்துள்ள கெட்ட சக்தி விலக, அந்தப் பெண்ணை நாய்க்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்தது.
மாங்லி முண்டா என்ற அந்தப் பெண்ணுக்கு இத்திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. ஆனாலும் உள்ளூர் பெரியவர்கள் சொன்ன பிறகு அவரால் தட்டிக் கழிக்க முடியவில்லை.திருமணத்திற்கு சம்மதித்து மனதில் கலக்கமிருந்தாலும், முகத்தில் புன்னகையோடு மணப்பெண்ணாக சம்மதித்தார்.

மங்லி முண்டா
ராஞ்சியில் வசித்து வரும் இளம்பெண் மங்லிமுண்டாவின் நடவடிக்கைகள் குறித்து சந்தேகம் கொண்ட கிராமத்தினர் இவருக்கு பேய் பிடித்திருப்பதாகவும் இதனால் கிராமத்திற்கு ஆபத்து எனவும் பெற்றோரிடம் கூறினர்.

நாய் மாப்பிள்ளை
உடனே பெண்ணின் பெற்றோர் கிராமத்தை காப்பாற்ற ஜோதிடர்களின் அறிவுரைப்படி நாயுடன் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர்.

மாப்பிள்ளை அழைப்பு
திருமண விழாவிற்கான ஏற்பாடுகள்நடைபெற்றது. மணமகனான ஷெரு என்ற நாயை கிராமத்தினர் காரில் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி போன்று ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

திருமண விருந்து
பின்னர் திருமண அரங்கில் மணமகள் மங்லிமுண்டாவிற்கும்,ஷெருவிற்கும் (நாய்) பாரம்பரிய முறைப்படி மங்கல இசையுடன்திருமணம் நடத்தி வைத்தனர். திருமணத்தில் 70-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறுசுவை விருந்து,என திருமண விழா அமர்களப்பட்டது.

நாயுடன் வாழ்க்கை
இந்த வினோத திருமணம் குறித்து கருத்து தெரிவித்த மங்லி முண்டா முதலில் தனக்கு இத்திருமணத்தில் உடன் பாடில்லாமல் இருந்தது எனவும்,பின்னர் பெற்றோர் மற்றும் கிராமத்தினரின் சந்தோசத்தை கருத்தில் கொண்டு சம்மதித்ததாகவும் கூறினார். இனி தனக்கு அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்த போவதாக தெரிவித்துள்ளார்.

வினோத சம்பவங்கள்
மேலும் அவர் கூறுகையில் இப்பகுதியில் இது போன்ற நிகழ்ச்சிகள் இது முதல்முறையல்ல எனவும் ஏற்கனவே இது போல் நான்கு அல்லது ஐந்து வினோத சம்பவங்கள் நடந்துள்ளதால் தான் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications