போபாலில் ஓடும் பேருந்தில் பெண் கதறக் கதற பலாத்காரம்: டிரைவர் உள்பட 3 பேர் கைது
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 35 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 35 வயது பெண் ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தை சல்லு என்பவர் ஓட்டியுள்ளார். தீபக் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார்.

பேருந்தில் இருந்த பயணிகளில் அந்த பெண் மற்றும் ராஜு என்பவரைத் தவிர மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுத்தம் வந்ததும் இறங்கிச் சென்றுவிட்டனர். அந்த பெண்ணும் கீழே இறங்க முயன்றபோது பேருந்தை திருப்பிக் கொள்கிறேன் அதன் பிறகு இறங்கிச் செல்லுங்கள் என்று டிரைவர் சல்லு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பேருந்தில் இருந்த அந்த பெண்ணை தீபக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதற்கு சல்லுவும், ராஜுவும் உதவி செய்துள்ளனர். அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு அவரை வருமான வரித்துறை அலுவலகம் அருகே இறக்கிவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.
அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சல்லு, தீபக், ராஜு ஆகிய 3 பேர் மீதும் பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் சல்லு ஓட்டிய பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications