கணவர், மைத்துனர் கண் எதிரில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்! டெல்லி அருகே கொடூரம்
Recommended Video

டெல்லி: குர்கான் அருகே கணவர் மற்றும் மைத்துனரை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக்கொண்டு இளம் பெண் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு நடந்துள்ளது. குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு அந்த பெண் தனது கணவர் மற்றும் மைத்துனருடன் திரும்பும்போது இந்த கொடூர செயல் அரங்கேறியுள்ளது.
மைத்துனரின் காரில், கணவர் மற்றும் மைத்துனருடன் 22 வயதுள்ள அந்த பெண், செக்டார் 56 பகுதியிலுள்ள, பிசினஸ் பார்க் டவர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கணவர் காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார்.

பாத்ரூம் செல்ல கார் நிறுத்தம்
இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த இளம்பெண்ணின் கணவர் கீழே இறங்கி சென்றுள்ளார். அப்போது 2 கார்களில் நால்வர் அங்கே வந்துள்ளனர். ஏன் இங்கே காரை நிறுத்தி உள்ளீர்கள் என அதிகார தோரணையில் அவர்கள் கேட்டுள்ளனர். இதற்கு அந்த பெண்ணின் மைத்துனரும், கணவரும் பதில் சொல்லிக்கொண்டிருந்தபோதே, நால்வரின் பார்வையும், காருக்குள் இருந்த அந்த இளம்பெண் மீது பதிந்துள்ளது.

துப்பாக்கி முனையில் பலாத்காரம்
தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்ட அந்த நால்வரும் திடீரென பாய்ந்து சென்று, அந்த பெண்ணை காருக்கு வெளியே இழுத்து கொண்டுவந்தனர். மூன்று பேர் துப்பாக்கி முனையில், கணவரையும், மைத்துனரையும் பிடித்துக்கொண்டனர். மற்றொருவர் அந்த பெண்ணை அவர்கள் கண் எதிரில் பலாத்காரம் செய்தார். இப்படி மாறி, மாறி அந்த பெண்ணை பலாத்காரம் செய்த பிறகு நால்வரும் காரில் தப்பினர்.

கார் பதிவு எண்
தப்பிச் செல்லும் முன்பாக இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு சென்றனர். ஆனால் அந்த நேரத்திலும் அப்பெண்ணின் கணவர், பலாத்கார கொடூரர்கள் தப்பிச் சென்ற கார் ஒன்றின் பதிவு எண்ணை கவனித்துக்கொண்டார். இதுகுறித்து பின்னர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் துரித நடவடிக்கை
குர்கான் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கார் பதிவு எண்ணை வைத்து, சோஹ்னா பகுதியிலுள்ள ஜோகல்கா கிராமத்தை சேர்ந்த நான்கு காமுகர்களையும் கைது செய்துள்ளனர். உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதவி போலீஸ் கமிஷனர் மனிஷ் செகல் தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications