ரயிலில் மிஸ்ஸான iPad மீண்டும் கிடைத்தது.. இளம்பெண் செய்த செயல்.. நீங்களும் ‛ட்ரை' பண்ணுங்க
போபால்: ரயில் பயணத்தின்போது இளம்பெண் ஒருவர் தனது ஐபாட்டை விட்டு சென்றார். ரயிலில் இருந்து இறக்கி ஒரு மணிநேரம் கழித்து தான் அவர் ஐபாட் தொலைந்ததை அறிந்தார். உடனடியாக அவர் ரயில் மடட் செயலியை பயன்படுத்தி புகார் அளித்த நிலையில் ஐபாட் விரவைாக மீட்டு அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது? மற்றவர்களும் இதனை எப்படி பயன்படுத்தி தொலைந்த பொருட்களை மீட்க முடியும்? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம்மில் பலரும் பஸ், விமானம், ரயில் பயணங்களின்போது திடீரென்று ஏதாவது ஒரு பொருளை மறந்துவிட்டு செல்வது உண்டு. குறிப்பாக ரயில் பயணங்களின்போது இது அடிக்கடி நடக்கும். லக்கேஜ் பேக், லேப்டாப், செல்போன், சார்ஜர்கள் என பல்வேறு பொருட்களை நாம் ரயிலில் விட்டு செல்லலாம்.

இது நமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தலாம். ஆனால் இனி ரயிலில் ஏதாவது ஒரு பொருளை தொலைத்துவிட்டால் இந்த முறையை பயன்படுத்தி எளிதாக பெற முடியும். தற்போது கூட ரயிலில் ஐபாட்டை விட்டு சென்ற இளம்பெண் அதனை திரும்ப பெற்றது எப்படி? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு ரயில்மடட் செயலியை(RailMadad App) பயன்படுத்தி எப்படி திரும் பெற்றார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
மத்திய பிரதேசத்தில் தக்ஷின் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. கடந்த 28 ம் தேதி தியா என்ற இளம்பெண் இந்த ரயிலில் பயணித்தார். அப்போது அவர் தனது ஐபாட்டை ரயிலில் மறந்து விட்டார். ஐபாட்டை எடுக்காமல் அவர் ரயிலில் இருந்து இறங்கி சென்றார். ஒரு மணிநேரம் கழித்து தான் அவர் தனது ஐபாட்டை ரயிலில் மறந்து வந்ததை உணர்ந்தார்.
உடனடியாக அவர் ரயில் மடட் செயலில் புகார் செய்தார். தான் பயணித்த ரயில், அதன் எண் மற்றும் ரயில்வே ஸ்டேஷன், ரயில் கோச் எண் உள்ளிட்டவற்றை அவர் பதிவு செய்து புகார் அளித்தார். அதன்பிறகு 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். உடனடியாக அந்த குறிப்பிட்ட ரயிலில் உள்ள ரயில்வே போலீஸ், டிக்கெட் பரிசோதகள் உள்ளிட்டவர்களுக்கு சம்பவம் குறித்த தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து சென்று உடனடியாக தியாவின் ஐபாட்டை மீட்டனர். பிறகு பயணிகளுக்கான உதவி மையத்தில் இருந்து அவருக்கு போன் வந்தது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர் மற்ம் ரயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் இட்டார்சி ரயில் நிலைய ஊழியர்கள் என அனைவரும் முயன்று ஐபாட்டை மீட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த ஐபாட் தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
RailMadad app என்பது இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ செயலியாகும். இதனை ஒவ்வொருவரும் தங்களின் செல்போனில் டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியும். ரயில் பயணத்தின்போது ரயில்வே சார்பில் ஏதாவது உதவியை பெற விரும்பினால் இந்த செயலி வழியாக பெறலாம்.
குறிப்பாக ரயில் சுத்தமின்றி இருப்பது, பாதுகாப்பு குறைபாடு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாதது உள்ளிட்டவை பற்றி புகார் தெரிவித்தால் உடனடியாக அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications