பீகாரில் கணவருடன் உடன் கட்டை ஏறிய 65 வயது மூதாட்டி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவருடன் பெண் ஒருவர் உடன் கட்டை ஏறியுள்ளார்.

பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள பர்மினியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரித் மண்டல்(70). புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் ஞாயிற்றுக்கிழமை உயிர் இழந்தார். அவரது இழப்பை தாங்க முடியாமல் அவரது மனைவி தஹ்வா தேவி(65) வீட்டின் ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். உறவினர்கள் மண்டலின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்துவிட்டு வீடு திரும்பினர்.

Woman revives 'Sati Pratha', jumps on husband's funeral pyre

அப்போது வீட்டில் தேவியை காணவில்லை. இதையடுத்து அவரது மகன் ரமேஷ் மண்டல் அவரை பல இடங்களில் தேடினார். அப்போது சிலர் தேவி சுடுகாட்டை நோக்கி ஓடியதாக தெரிவித்தனர். உடனே ரமேஷ் மற்றும் உறவினர்கள் சுடுகாட்டுக்கு விரைந்து சென்றனர்.

அங்கு பார்த்தால் ராம் சரித் மண்டலின் உடல் எரிந்து கொண்டிருந்த தீயில் குதித்து தேவியும் தனது உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அதே இடத்தில் தேவிக்கும் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பர்மினியா கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கிராமத்தாரிடம் வாக்குமூலம் வாங்கியதை போலீசார் வீடியோ எடுத்தனர். தேவி தற்கொலை செய்து கொண்டதாக கருத்தப்பட்டுள்ளதால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

இந்தியாவில் நடைமுறையில் இருந்த சதி என்னும் கணவருடன் உடன்கட்டை ஏறும் முறை 1829ம் ஆண்டில் தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+