பிளாட்ஃபார்மில் வைத்து.. பாலியல் வன்கொடுமை.. சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்.. உஜ்ஜைனில் கொடூரம்

Subscribe to Oneindia Tamil

போபால்: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ளது. அப்பிரச்னை ஓய்வதற்குள்ளேயே மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் பிளாட்ஃபார்மில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்காமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

madhyapradesh crime

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்நிலையில், ஆன்மிக நகரமான உஜ்ஜைனில் பட்டப்பகலில் பிளாட்ஃபார்மில் வைத்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரம் ஆன்மிகத்துப் பெயர்பெற்ற நகரமாகும். இந்நிலையில், உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு செப்டம்பர் 4 ஆம் தேதி பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார். அந்தப் புகாரில், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய லோகேஷ் என்பவர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, இரண்டு மணி நேரத்தில் லோகேஷை கைது செய்தனர். லோகேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண்ணை மது அருந்தச் செய்ததாகவும், பின்னர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் பிளாட்ஃபார்மில் நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தடுக்காமல், பலரும் வீடியோ எடுத்ததுதான் இதில் அதிர்ச்சிகரம்.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்குப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து, மத்தியப் பிரதேசத்தின் மாநில காங்கிரஸ் தலைவர் ஜித்து பட்வாரி கூறுகையில், கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்துக்கு எதிராக பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் நாளொன்றுக்கு 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை அல்லது ஏதேனும் ஒரு வகையான துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர். முதல்வரின் சொந்த தொகுதியில் பட்டப்பகலில் நடைபாதையில் வைத்து பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. முதல்வர் மோகன் யாதவ், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஏன் அமைதியாக இருக்கின்றனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து, பாஜக மாநிலத் தலைவர் வி.டி.சர்மா கூறுகையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை காங்கிரஸ் அரசியலாக்குகிறது. மத்தியப்பிரதேச அரசை முற்றுகையிடுவதற்கு காங்கிரஸுக்கு எந்தவொரு பிரச்னையும் இல்லை. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் அரசு பாஜகதான்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை போலீஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+