நிலத்தகராறில் பெண் தாக்கப்பட்டு, நிர்வாணம்- விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு
பாட்னா: பீகாரில், நிலத்தகராறு தொடர்பாக பெண் ஒருவர் பொது இடத்தில் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் ஜிதன் ராம் மான்ஜி உத்தரவிட்டுள்ளார்.
பீகார் மாநிலம் ஜெகனபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நிஜாமுதீன்பூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சங்கீதா தேவி (40) என்ற பெண் மீது, நில விவகாரம் காரணமாக சக்தி சிங் என்ற வாலிபரைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஒரு கும்பலாக திரண்டுவந்து சங்கீதா தேவியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் சங்கீதா தேவியை வீட்டிற்கு வெளியே இழுத்து வந்து அவரை மோசமாக தாக்கி அவரை நிர்வாணபடுத்தினர்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கு நின்று இருந்த லோக்கல் போலீசார் பார்த்த்க்கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் சங்கீதா தேவியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பின்னர் படுகாயமடைந்த சங்கீதா தேவியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசாரே சேர்த்துள்ளனர்.
பெண் ஒருவர் பொது இடத்தில் குறிப்பாக தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டிய போலீசார் முன்னிலையில் தாக்கப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவம் பீகாரில் பரபரப்பை உண்டாக்கியது.
இது தொடர்பாக அம்மாநில பெண்கள் ஆணைய தலைவி அன்ஜூம் ஆரா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் இன்றைய சட்டசபை கூட்டத்திலும் எதிரொலித்தது. எதிர்கட்சிகள் இந்த சமபவத்திற்கு கண்டன குரல் எழுப்பின. இதை தொடர்ந்து பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி இந்த விவாகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications