நண்பர்களிடையே கார் ரேஸ்: பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பரிதாப பலி
புனே: புனேவில் நண்பர்களுக்கு இடையேயான கார் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 25 வயது பெண் சாப்ட்வேர் என்ஜினியர் பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் க்ருதிகா நந்தலஸ்கர்(25). சாப்ட்வேர் என்ஜினியர். அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பர் சுமித் வாஞ்சரியின் வீட்டிற்கு சென்றுள்ளார். வாஞ்சரியின் வீட்டிற்கு க்ருதிகா தவிர்த்து சன்னி தபசி, ஆர்த்தி சோனாவானே, சவுரப் ஷின்டே, கணேஷ் கெய்க்வாட், சைதன்யா ஜோஷி, துஷார் ஜாதவ் ஆகியோரும் சென்றுள்ளனர்.

திடீர் என அவர்கள் லோனாவாலா வரை காரில் சென்று வர முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இரண்டு கார்களில் இரவு 2.30 மணிக்கு லோனாவாலாவுக்கு கிளம்பினர். அவர்கள் கட்ரஜ்-தேஹு ரோடு பைபாஸில் செல்கையில் இரண்டு கார்களுக்கும் இடையே போட்டி வைத்து வேகமாக ஓட்டினர். இரு கார்களும் போட்டி போட்டுக் கொண்டு படுவேகமாக சென்றன.
அப்போது தபசி இருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. க்ருதிகா இருந்த காரோ சாலையோரம் இருந்த உணவகம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் க்ருதிகா சம்பவ இடத்திலேயே பலியானார்.
காயம் அடைந்த சன்னி, சுமித், ஆர்த்தி, சவுரப், கணேஷ், சைதன்யா, துஷார் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications