உ.பி.யில் பயங்கரம்: ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்ட பெண் கவலைக்கிடம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவரை மர்ம நபர்கள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் 30களில் உள்ள பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் பயணம் செய்துள்ளார். அவரை மர்ம நபர்கள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். ஷாம்லி மாவட்டத்தில் உள்ள டெல்லி-ஷஹரன்பூர் ரயில்பாதையில் அவர் சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார்.

அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்துவிட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே அந்த பெண்ணை ரயில்வே போலீசார் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஷாம்லி மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. இதற்கிடையே அவர் யார் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இளம்பெண்கள், சிறுமிகள் கூட பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடுமையும் அங்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications