ஓடியாங்க.. டெலிவரி பாய் கெடுக்க பார்த்தார்.. அதிர வைத்து.. பிளேட்டை திருப்பி போட்டு பெண் பல்டி!
அமேசான் டெலிவரி பாய் மீது பெண் போலி புகார் அளித்துள்ளார்
நொய்டா: நொய்டாவில் டெலிவரி கொண்டு வந்தவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தனியார் நிறுவன பெண் ஊழியர். பின்னர் அந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப் பார்த்ததாக போலீஸில் புகார் கூறினார். ஆனால் அதே வேகத்தில் வழக்குப் போட வேண்டாம் என்றும் அவர் கூறவே போலீஸார் குழம்பிப் போய் விட்டனர்.
ரோகினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவ தினத்தன்று அவர் அமேசானில் ஆர்டர் செய்திருந்த ஒரு பொருளை டெலிவரி பாய் அவரது வீட்டுக்குக் கொண்டு வந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸாருக்குப் போன் போட்ட அவர் தன்னை டெலிவரி பாய் பாலியல் பலாத்காரம் முயற்சிப்பதாக புகார் கொடுத்தார். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலையத்திற்கு நேரில் வந்து புகார் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் போலீஸாருக்கு போன் வந்தது. மீண்டும் அதே பெண்தான் பேசினார்.
நான் கொடுத்த புகாரை எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் வழக்குப் போட விரும்பவில்லை என்று கூறினார். இதனால் போலீஸார் குழப்பமடைந்தனர். ஏன் என்ன காரணம் என்று போலீஸார் திரும்பத் திரும்ப கேட்டபோது, நான் புகார் சொல்லவில்லை. எனது சகோதரிதான் புகார் கூறினார். இதை இப்படியே விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
அதேசமயம், சம்பந்தப்பட்ட டெலிவரி பாய் காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸாரிடம் நடந்ததை விளக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை அறிந்து அவரை விடுவித்தனர்.
உண்மையில் நடந்தது என்ன என்று தெரியவில்லை. பெண்ணின் புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விட்டதால் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications