வன்முறைகளால் வாக்களிக்க தயங்கும் பெண்கள் – பரபர ஆய்வில் தகவல்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் 60 சதவீதம் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் முக்கிய ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வருவதே இல்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக நாட்டில் நடக்கும் பயங்கரவாத செயல்களின் மீதான பயம்தான் என்று கூறப்படுகின்றது.
இந்த ஆய்வானது 2003 இலிருந்து 2013 வரையிலான பயங்கரவாத செயல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

பெண் வாக்காளார்கள் அதிகம்:
3 நாடுகளிலும் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகி வந்தாலும், தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

வன்முறைகளால் பயம்:
"கிட்டதட்ட 90 சதவீதம் பெண்கள் பயங்கரவாத செயல்களுக்கு பயந்து கொண்டே அரசியலுக்கு வருவதில்லை" என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான பெண்கள் நல அதிகாரி ரெபேக்கா ரெச்மான் டாவரெஸ்.

குடும்ப முடிவு:
50 சதவீத பெண்களின் தேர்தல் வாக்களிப்பு பற்றிய முடிவுகள் அவர்களில் குடும்பத்தினராலேயே எடுக்கப்படுகின்றன.

மூடிமறைக்கும் கட்சிகள்:
பயங்கரவாதம், பாலியல் வன்முறைகள் பற்றிய செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டாலும், அரசியல் கட்சிகள் அவற்றை மூடி மறைக்கவே பார்க்கின்றன.

இளம் வாக்காளர்கள்:
"இளம் வாக்காளார்கள்தான் அதிக அளவிலான சமூக வன்முறைகளில் பாதிக்கப்படுகின்றனர்" சமூகவியல் நிறுவன நிர்வாகி ரஞ்சனா குமாரி கூறியுள்ளார்.

நடவடிக்கை வேண்டும்:
அரசியல் கட்சிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு உரிய நடைமுறைகளை கையாளாத வரையில் இந்த சதவீதம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பதவியில் பெண்கள்:
மேலும், அரசியலில் பெண்களை அதிக அளவில் உயர் பதவிகளில் ஈடுபடுத்த வேண்டும்.அதனால் மட்டுமே பெண்கள் தைரியமாக தங்களுடைய ஜனநாயகக் கடமையில் ஈடுபட முடியும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications