"எல்லையை தாண்டவும் துளியும் தயங்க மாட்டோம்! ஜாக்கிரதை" பயங்கரவாதிகளுக்கு ராஜ்நாத் சிங் வார்னிங்
கவுகாத்தி: எல்லை தாண்டி நாட்டிற்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அசாம் மாநில வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அம்மாநில தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா ராணுவம் குறித்துத்

எல்லை தாண்டி தாக்குதல்
அசாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்த மெசெஜ்சை நாங்கள் தொடர்ந்து அனுப்பி வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்து நமது நாட்டுக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தினார், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவும் கூட நாங்கள் தயங்க மாட்டோம்.

வங்கதேசம்
வங்கதேசம் நட்பு நாடு. இப்போது நமக்கு நாட்டின் கிழக்குப் பகுதியில் வங்கதேசம் உடனான எல்லையில் அமைதியான சூழலே நிலவுகிறது. மேற்கு எல்லையுடன் (பாகிஸ்தான்) ஒப்பிடும்போது நாட்டின் கிழக்கு எல்லை (வங்கதேசம்) தற்போது அதிக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலவி வருகிறது. மேற்கு எல்லையில் நிலவும் பதற்றமா சூழல் இப்போது கிழக்கு எல்லையில் இல்லை.

ஆயுதப்படை சிறப்புச் சட்டம்
கிழக்கு எல்லையில் ஊடுருவல் பிரச்சனை கிட்டத்தட்ட முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது இங்குக் கிழக்கு எல்லையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவுகிறது. பல வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்புச் சட்டம் (AFSPA) சமீபத்தில் தான் திரும்பப் பெறப்பட்டது. மாநிலத்தில் நிலைமை மேம்படும் போது எல்லாம் மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுத்தது.

ராணுவம் இல்லை
ஆயுதப்படை சிறப்புச் சட்டம் எப்போதும் அமலில் இருக்க வேண்டும் என்று ராணுவம் நினைப்பதாகத் தவறான எண்ணம் உள்ளது. ஆயுதப்படை சிறப்புச் சட்டம் இருப்பிற்கும் நீக்கப்படுவதற்கும் காரணம் ராணுவம் அல்ல, அங்குள்ள நிலைமைகளே காரணம்" என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications