டெல்லி: பொம்மை தொழிற்சாலையில் தீ விபத்து: ஒருவர் பலி
டெல்லி: டெல்லியில் உள்ள பொம்மை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டெல்லியின் முண்டகா பகுதியில் பொம்மை தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மதியம் அத்தொழிற்சாலையில் திடீரென தீ பற்றியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனபோதும் தீவிபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த தீவிபத்தில் சிக்கி 33 வயது தொழிற்சாலை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘45 தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி இரவு 8.20 மணியளவில் தீயை முழுவதுமாக அணைத்துவிட்டனர். ஆனபோதும் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications