ரூ500 கோடி செலவில், 405 அடியில் உலகின் உயரமான கோவில்: பீகாரில் 11ம் தேதி பூமிபூஜை

Subscribe to Oneindia Tamil

பாட்னா: ரூ.500 கோடி செலவில் பீகாரில் 405 அடி உயர கோபுரத்துடன் உலகின் மிகப்பெரிய கோயில் ஒன்றை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

பீகாரின் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் இந்தக் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை , வரும் 11ம் தேதி துர்கா பூஜையன்று நடத்தப் படுகின்றது.

பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கி.மீட்டர் தூரத்தில் அமையவுள்ள இந்த கோயிலுக்கு விரட் ராமாயண் மந்திர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கோபுரம் 405 அடி உயர கோபுரத்துடன் அமைய இருக்கின்றது.

World's largest temple to be built in Bihar

இது குறித்து கோயிலை நிர்மாணிக்கும் பணியை செய்து வரும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் குனால் தெரிவித்ததாவது, ‘இந்த கோயிலை கட்டுவதற்காக 190 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை சமன்படுத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டது. ரூ.500 கோடி செலவில் கட்டப்படும் இந்த கோயிலின் வளாகத்தில் சிவாலயம் உள்பட 18 சிறிய ஆலயங்கள் அமைக்கப்படும்.

சிவாலயத்துக்கள் உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் உருவாக்கப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் அமரும் வகையில் பிரமாண்டமான அரங்கமும் உருவாக்கப்படும்' எனக் கூறியுள்ளார்.

கம்போடியா நாட்டில் இந்து மன்னர் சூர்யவர்மனால் கட்டப்பட்ட 215 அடி உயர அங்கோர்வாட் கோயில் உலகின் புராதாண சின்னங்களுள் ஒன்றாக 'யுனெஸ்கோ' அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.த்துள்ளது. தற்போது பீகாரில் கட்டப்பட உள்ள இந்த புதிய கோயில் அங்கோர்வாட் கோயிலைவிட 2 மடங்கு உயரம் கொண்டதாக உருவாகலாம் என கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+