மல்யுத்தம்:'பாலியல் புகார்' பிரிஜ் பூஷணை ஏன் மத்திய பாஜக அரசு பாதுகாக்கிறது? பிரியங்கா சரமாரி கேள்வி
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் புகார் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணை மத்திய அரசு ஏன் பாதுகாக்கிறது என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரிஜ் பூஷண் உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது நாட்டுக்கு பெருமை தேடி தந்த மல்யுத்த வீராங்கனைகள் பொதுவெளியில் பகிரங்கமாக பாலியல் அத்துமீறல் புகார்கள் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களுக்கு நீதி கோரி டெல்லி வீதிகளில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு. இந்த கமிட்டி அறிக்கை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. இதனால் தங்களுக்கு நீதி கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரிஜ் பூஷணுக்கு எதிராக கடுமை காட்டியது. பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஒரு வழக்கு கூட ஏன் பதிவு செய்யவில்லையே என கேள்வி கேட்டது.
இதனால் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும் என உறுதி மொழி அளித்தது மத்திய அரசு. நேற்று மாலைக்குள் வழக்கு பதியப்படும் என நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை பிரிஜ் பூஷண் மீது வழக்கு பதியவில்லை என்றே கூறப்படுகிறது.
அதேநேரத்தில் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று காலை டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, மத்திய அரசு ஏன் பிரிஜ் பூஷணை பாதுகாக்கிறது என கேள்வி எழுப்பினார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications