ஜெயலலிதா சிறையில் இருப்பதை இரு மாநில பிரச்சினையாக்காதீர்கள்: எடியூரப்பா வேண்டுகோள்
பெங்களூர்: ஜெயலலிதா வழக்கை தொடர்ந்து, தமிழர், கன்னடர் உறவில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தேசிய துணைத் தலைவர்களில் ஒருவருமான எடியூரப்பா பெங்களூரில் இதுகுறித்து கூறியதாவது: ஜெயலலிதா வழக்கு, ஜாமீன் மறுப்பு போன்றவை எல்லாம் சட்ட நடவடிக்கைகள். எனவே எக்காரணத்தைக் கொண்டும், சென்னையிலுள்ள தமிழர்கள், அங்கு வசிக்கும் கன்னடர்களுக்கு எதிராக கோபப்பட வேண்டாம்.

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக கூறிக்கொண்டு வன்முறையை பிரயோகிப்பது என்பது, அவருக்கு எதிராகவே போய் முடியும் வாய்ப்பைத்தான் தரும். எனவே கோர்ட் வழக்கு தொடர்பாக கன்னடர், தமிழர் மத்தியில் பிரிவினை வேண்டாம். விரல் எண்ணிக்கையிலுள்ள தமிழர்கள்தான் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுகிறார்களே தவிர, பெரும்பான்மை தமிழர்கள் அமைதியாக, சட்டம் குறித்த தெளிவு கொண்டவர்களாகவே உள்ளனர்.
இருப்பினும் ஒரு சிலர் செய்யும் அந்த வன்முறைகளும் நிறுத்திக்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று எடியூரப்பா தெரிவித்தார்.
எடியூரப்பா கர்நாடக முதல்வராக இருந்தபோது, தமிழர், கன்னடர் உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தவர் என்பதும், 18 ஆண்டுகளாக பெங்களூரில் திறக்கவிடாமல் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை எடியூரப்பாவின் உத்தரவு திறக்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications