காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி. பாட்டிலுக்கு அமைச்சர் பதவி... எடியூரப்பா பேரம் பேசிய 3-ஆவது ஆடியோ ரிலீஸ்
காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி. பாட்டிலிடம் எடியூரப்பா ரூ. 15 கோடி பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று ரிலீஸானது.
Recommended Video

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் தான் கொண்டு வரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனக்கு வாக்களித்தால் ,காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி. பாட்டிலுக்கு அமைச்சர் பதவி தருவதாக எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று ரிலீஸாகியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததை அடுத்து அதிக இடங்களை பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா அழைத்தார். அதன்படி எடியூரப்பா வியாழக்கிழமை அன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
[கர்நாடகா வாக்கெடுப்பு Live Updates]
இதை எதிர்த்து காங்கிரஸும் ஜேடிஎஸ் கட்சியும் உச்சநீதிமன்றத்தை நாடின. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் நேரம் கொடுத்த போதிலும் இன்று பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பாஜக தனக்கு தேவையான 8 எம்எல்ஏக்கள் மற்ற கட்சிகளிடமிருந்து இழுக்க பார்க்கிறது. காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை தக்க வைத்து கொள்ள பாடுபடுகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி.பாட்டிலிடம் எடியூரப்பா போனில் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் எம்எல்ஏ பாட்டிலுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக எடியூரப்பா கூறுகிறார்.
அந்த ஆடியோ உரையாடல் பின்வருமாறு:
பிசி பாட்டில்: ஹலோ ஹலோ ஹலோ
எடியூரப்பா- ஹலோ
பாட்டில்: அண்ணா வணக்கம், வாழ்த்துகள்
எடியூரப்பா: நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?
பாட்டில்: கொச்சிக்கு பேருந்து மூலம் செல்கிறேன்
எடியூரப்பா: நீங்கள் கொச்சிக்கு செல்ல வேண்டாம். திரும்பி வாருங்கள். உங்களைநான் அமைச்சராக்குகிறேன். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்கிறேன்.
பாட்டில்: அண்ணா, ஓகே இப்பபோய் சொல்கிறீர்களே
எடியூரப்பா: நேரம் வரும் போது மட்டும்தான் சொல்லமுடியும். அதனால்தான் இப்போது சொல்கிறேன். எனவே கொச்சிக்கு போகாமல் திரும்பி விடுங்கள்.
பாட்டில்: ஆனால் நாங்கள் பஸ்ஸில் இருக்கிறோம்.
எடியூரப்பா: போக வேண்டாம், ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு என்னிடம் வந்துவிடுங்கள்.
பாட்டில்: என்னுடைய பதவி என்னவாக இருக்கும்
எடியூரப்பா: உங்களை அமைச்சராக்குகிறேன்
பாட்டில் : அண்ணா என்னுடன் 3 பேர் இருக்கின்றனர்.
எடியூரப்பா: அவர்களையும் அழைத்து வாருங்கள். உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா
பாட்டில் : இருக்கிறது அண்ணா
எடியூரப்பா: அப்பறம் என்ன திரும்பி வாருங்கள், பேருந்தில் செல்ல வேண்டாம்.
பாட்டில்: ஓகே அண்ணா ஓகே
எடியூரப்பா: நீங்கள் கொச்சிக்கு சென்றுவிட்டால் எல்லாம் முடிந்து விடும். என்னால் உங்களை தொடர்பு கொள்ளவே முடியாது.
பாட்டில் : ஓகே ஓகே அண்ணா
இவ்வாறு உரையாடல் முற்று பெறுகிறது. இதுபோல் பேரம் வீடியோ வெளியாவது இது மூன்றாவது ஆகும்.












Click it and Unblock the Notifications