For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு live updates: குமாரசாமி பதவியேற்பில் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு

எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து வரும் திங்கள்கிழமையன்று தாம் முதல்வராக பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.

Karnataka Assembly Floor Test Live Updates and Results

Newest First Oldest First
8:08 AM, 20 May

கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி வரும் மே 23-இல் பதவியேற்க முடிவு செய்துள்ளார்
11:11 PM, 19 May

தென்மாநில மக்களிடையே சுமூக உறவை ஏற்படுத்த முதல்வராக பதவியேற்கும் குமாரசாமி முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
9:06 PM, 19 May

குமாரசாமி கர்நாடகா முதல்வராக பதவியேற்க உள்ள விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கின்றனர். பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7:57 PM, 19 May

பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், மமதா, மாயாவதி, சந்திரசேகர் ராவ், சந்திரபாபு நாயுடு, தேஜஸ்வி, ராகுல், அகிலேஷ் பங்கேற்பார்கள் என குமாரசாமி தெரிவித்தார்.
7:45 PM, 19 May

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, திங்கள்கிழமையன்று பதவி ஏற்க உள்ளேன். காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் நிர்வாகிகளுடன் அமைச்சரவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன் என்றார்.
7:36 PM, 19 May

ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி; காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோரினார் குமாரசாமி
7:33 PM, 19 May

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பாஜகவின் அனந்த் குமார், ஜேடிஎஸ்- காங்கிரஸ் நிலையான ஆட்சியைத் தர முடியாது. பாஜகவால் மட்டுமே நிலையான ஆட்சித் தர முடியும். 78 இடங்களைப் பெற்ற போதும் ஜேடிஎஸ்-ன் காலில் விழுந்து கிடப்பது காங்கிரஸுக்கு அவமானம் என்றார்.
7:25 PM, 19 May

ஆளுநர் மாளிகையை சென்றடைந்தார் குமாரசாமி .. இன்னும் சற்று நேரத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி
7:09 PM, 19 May

தென்னிந்தியாவில் காலூன்றலாம் என்கிற பாஜகவின் எண்ணம் நிறைவேறு; குதிரை பேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது என அரியலூரில் வைகோ பேட்டி
6:59 PM, 19 May

குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு பாஜக அல்லாத முதல்வர்களை அழைக்க காங்கிரஸ்- ஜேடிஸ் திட்டம்.
6:53 PM, 19 May

திங்கள்கிழமை பிற்பகல் குமாரசாமி முதல்வராக பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
6:49 PM, 19 May

ஆளுநரை இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறார் குமாரசாமி. ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் குமாரசாமி
6:37 PM, 19 May

கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்; கோவா, மணிப்பூர், மேகாலயாவில் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றியதற்கு சரியான பாடம் என்கிறார் திருமாவளவன்
5:53 PM, 19 May

ட்விட்டரில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது: கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு.
5:31 PM, 19 May

எடியூரப்பா ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்; இனிப்புகளை பரிமாறி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்
5:28 PM, 19 May

லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பாஜகவுக்கு மிகப் பெரும் பின்னடைவு இது. 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு இதேபோல்தான் திட்டமிட்டிருந்திருக்கலாம். தற்போது அவர்களது வியூகங்களை மாற்ற சிந்திக்கலாம் என்றார்.
5:09 PM, 19 May

காங்கிரஸ், ஜேடிஎஸ், சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பெங்களூரு ஹோட்டலில் இன்று ஆலோசனை
5:09 PM, 19 May

ஜேடிஎஸ் காலில் காங்கிரஸ் விழுந்து கிடப்பது மிகவும் அவமானகரமானது- பெங்களூருவில் பாஜகவின் அனந்த் குமார் பேட்டி
5:09 PM, 19 May

கர்நாடகா ஆளுநர் தார்மீகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டுமா? என செய்தியாளர்கள் ராகுலிடம் கேள்வி; நல்ல முன்னுதாரணமாக இருக்கும்... அதே நேரத்தில் இன்னொரு ரஜூவாலா ஆளுநராக வருவார் என ராகுல் பதில்
5:05 PM, 19 May

ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அத்துமீறலை செய்யலாம் என நினைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு கர்நாடகாவில் பெரும் அடி தரப்பட்டுள்ளது; பணம், பதவி கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக முயன்றது- ராகுல்
5:04 PM, 19 May

ஆர்.எஸ். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்- சந்திரபாபு நாயுடு
5:04 PM, 19 May

ஜனநாயகத்தின் அனைத்து துறைகளையும் சர்வநாசமாக்கிவிட்டது பாஜக, தேசிய கீதத்தை இசைக்கும்போதே பாஜக எம்.எல்.ஏ.க்கள் எழுந்து சென்று அவமரியாதை செய்தனர்- ராகுல்
5:04 PM, 19 May

டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு - தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னரே பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபயை விட்டு வெளியேறினர்- ராகுல்
4:58 PM, 19 May

மதச்சார்பற்ற அணிகள் அமைய வேண்டும் என்பது அனைவருடைய விருப்பம்- மு.க.ஸ்டாலின்
4:58 PM, 19 May

ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அத்துமீறலை செய்யலாம் என நினைத்த பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு கர்நாடகாவில் பெரும் அடி தரப்பட்டுள்ளது; பணம், பதவி கொடுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற பாஜக முயன்றது- ராகுல்
4:45 PM, 19 May

ஆட்சி அமைக்க அழைப்பு வரும் என காத்திருக்கிறேன் என்கிறார் குமாரசாமி; ஆளுநரின் உதவியால் ஆட்சி அமைக்க முயன்று பாஜக தோற்றுவிட்டது- சீமான்
4:44 PM, 19 May

உச்சநீதிமன்றத்தால் கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது- குமாரசாமிக்கு வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
4:43 PM, 19 May

அரசியல் அமைப்புக்கு மோடி, அமித்ஷா நெருக்கடி கொடுத்தனர்- ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்துக்கு கிடைத்த வெற்றி- சித்தராமையா
4:30 PM, 19 May

இந்திய அரசியல் வரலாற்றில், இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. எடியூரப்பா, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர ஒப்புக்கொண்டு, அதை செய்ய முடியாமல் திராணியற்று, தோற்று ஓடியுள்ளது, மக்களாட்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று, சித்தராமையா கருத்து தெரிவித்தார்.
4:27 PM, 19 May

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி- சட்டத்தின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி- அரசியல் சாசனத்துக்கு கிடைத்த வெற்றி; குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது- குலாம்நபி ஆசாத்
READ MORE

English summary
The Supreme Court today ordered that a floor test be conducted in Karnataka Assembly at 4pm on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X