"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங்
சென்னை: பிக் பாஸ் ஜூலி மற்றும் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் நடிகர் அருண்ராஜன் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து ஜூலி தொடர்ந்து விமர்சன கருத்துகளை வெளியிட்டு வந்தார். அவரது பல பேட்டிகள் மற்றும் சமூக வலைதள பதிவுகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தின.

ஜூலி வைத்த குற்றசாட்டு
இந்த நிலையில் சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜூலி, தன்னை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்ததாகவும், ஆபாசமாக தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் அந்த மன அழுத்தம் காரணமாக தனக்கு கருசிதைவு ஏற்பட்டதாகவும், தனது குழந்தையை இழந்துவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அருண்ராஜன் பதிலடி
ஜூலி விஜய் மற்றும் டிவிகே குறித்து கருத்து தெரிவிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே, அதற்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் அருண்ராஜன்.
சமூக வலைதளங்களில் ஜூலியின் கருத்துகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்த அவர், தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசிய வார்த்தைகள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
கரு கலைந்ததா?
அருண்ராஜன் தனது வீடியோவில், "என்ன பேசுகிறீர்கள் ஜூலி? டிவிகேவால் தான் உங்களுடைய கரு கலைந்ததா? நாங்கள் அப்படி என்ன செய்துவிட்டோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், "டிவிகேவையும், அண்ணன் விஜயையும் எதிர்த்து பேசிய ஒரே பெண் நீங்கள் மட்டும் அல்ல. பல பெண்கள் விமர்சித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் நாங்கள் கருத்து ரீதியாகத்தான் பதிலளித்தோம்" என்றும் கூறியுள்ளார்.
ஜூலி கூறிய கருத்துகள்தான் இந்த சர்ச்சைக்கு காரணம் என்றும் அருண்ராஜன் தெரிவித்துள்ளார். "நீங்கள் சாதாரணமாக பேசவில்லை. மிகவும் கடுமையான கருத்துக்களை வெளியிட்டீர்கள். அதற்கு மக்கள் எதிர்வினை கொடுத்தார்கள். அதை முழுவதும் டிவிகே மீது சுமத்துவது சரியல்ல" என்பது அவரது கருத்தாக இருந்தது.
சட்டம் தெரியும்
வீடியோவில் மேலும் பேசிய அருண்ராஜன், "நீங்கள் எட்டு பேர் மீது புகார் கொடுத்திருக்கிறீர்கள். அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு தெரியும். என்னால் உங்கள் மீது வழக்கு போட முடியாதா? சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எங்களுக்கும் தெரியும்" என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், "நீங்கள் ஒரு பெண். இப்போதுதான் திருமணம் நடந்திருக்கிறது என்பதற்காகத்தான் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
வார்னிங்
வீடியோவின் இறுதியில் அவர் கூறிய கருத்துதான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. "இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க. எல்லாவற்றையும் பேசிவிட்டு பெண்கள் என்ற வார்த்தைக்கு பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் பேசிய சில கருத்துக்கள் பல குடும்பங்களில் உள்ள பெண்களையும் குழந்தைகளையும் மனதளவில் பாதித்திருக்கிறது" என்று அருண்ராஜன் கூறியுள்ளார்.
மேலும், "நீங்கள் இதை இப்படியே விடவில்லை யெனில் சட்ட ரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெடித்த விவாதம்
அருண்ராஜனின் இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது. ஒருபுறம் ஜூலிக்கு ஆதரவாக சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் அருண்ராஜனின் கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் அதிகமாக உள்ளனர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.
ஜூலி தரப்பின் அடுத்த பதில் என்ன?
இதுவரை ஜூலி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளித்துள்ள முக்கிய பிரபலங்களில் அருண்ராஜனும் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே ஜூலியின் கருத்துகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவர், இப்போதும் அதே நிலைப்பாட்டை தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அருண்ராஜனின் வீடியோவுக்கு ஜூலி தரப்பில் இருந்து என்ன பதில் வருகிறது? அவர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பாரா? அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவாரா? என்பதே தற்போது சமூக வலைதள பயனர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
-
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்













Click it and Unblock the Notifications