மோடியை ஆதரித்து கட் அவுட் வைத்துக் கலக்கிய எதியூரப்பா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர் பெங்களூரில் இன்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை வரவேற்று கட் அவுட் வைத்திருந்தார் முன்னாள் முதல்வரும், பாஜகவை விட்டு வெளியேறியவருமான எதியூரப்பா.

கர்நாடக பாஜகவின் அசைக்க முடியாத தலைவராக விளங்கியவர் எதியூரப்பா. ஆனால் தொடர் ஊழல் புகார்கள், கோஷ்டிப் பூசல் காரணமாக இவர் கட்சியை விட்டு வெளியேறினார்.

Yeddyurappa puts cut outs for Modi

தற்போது கர்நாடக ஜனதாக் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி நடத்தி வரும் எதியூரப்பா தனது பழைய செல்வாக்கை இழந்து காணப்படுகிறார். இவரது கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் பெரும் தோல்வியைத் தழுவியது, பாஜகவோ மோசமான தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டது.

இந்த நிலையில், மீண்டும் பாஜகவுடன் ஒட்ட விரும்புகிறார் எதியூரப்பா. இருப்பினும் பாஜகவில் எதியூரப்பாவை வரவேற்க ஆள் இல்லை. இதனால் குறுக்கு வழியில், அதாவது மோடி மூலமாக பாஜகவுக்குள் புகும் திட்டத்துடன் காய் நகர்த்தி வருகிறார் எதியூரப்பா.

மோடியை ஆதரித்து தொடர்ந்து பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று பெங்களர் வந்த மோடியை வரவேற்று, அரண்மனை மைதானத்தில் பிரமாண்ட கட் அவுடக்ளை வைத்து கலக்கி விட்டார் எதியூரப்பா. பாஜகவினரை விட எதியூரப்பா வைத்த கட் அவுட்கள்தான் பேச்சாக இருந்தது.

மோடி பின்னாலேயே போய், அப்படியே பாஜகவில் மீண்டும் ஐக்கியமாகி விடுவதுதான் எதியூரப்பாவின் திட்டம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+