பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் எடியூரப்பா ஆட்சி கலைந்த கதை தெரியுமா?
பெங்களூர்: எடியூரப்பா 15 நாட்கள் கூட எனக்கு தேவையில்லை, விரைவில் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுவேன் என இன்று அதிரடியாக கூறியுள்ளார்.
ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் ஆட்சியை இழந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் எடியூரப்பா. ஆம், காங்கிரஸ் கூட்டணியை முறித்துக்கொண்ட மஜதவுடன் கூட்டணி வைத்த பாஜக குமாரசாமியை முதல்வராக்கி அழகு பார்த்தது. ஆனால், ஒரு கண்டிஷன். 20 மாதங்கள் மட்டுமே நீங்கள் முதல்வர், அடுத்த 20 மாதங்கள், எடியூரப்பா முதல்வர் என்ற நிபந்தனையை விதித்திருந்தது பாஜக.

ஆனால் 20 மாதங்கள் நிறைவடைந்ததும், குமாரசாமி, எடியூரப்பாவை பார்த்து, "அஸ்கு, புஸ்கு, ஆசை, தோசை, அப்பளம், வடை" என சொல்லிவிட்டார். கடுப்பான எடியூரப்பா மஜதவுக்கு கொடுத்த பாஜக ஆதரவை வாபஸ் பெறவைத்தார். இதன்பிறகு (2007ம் ஆண்டு) எடியூரப்பா உடனே முதல்வராக பொறுப்பேற்றார்.
மஜத ஆதரவு இல்லாமல் வேறு என்ன காங்கிரஸ் ஆதரவையா பெற முடியும். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்க முடியாமல், பாஜக அரசு கலைந்தது. 7 நாட்களில் எடியூரப்பா ஆட்சியை பறிகொடுத்தார். இந்த நினைவு கண்டிப்பாக பாஜகவினருக்கு இப்போதும் கசப்பான அனுபவம்தான்.
ஆனால், அப்போது மத்தியில் இருந்தது காங்கிரஸ் கூட்டணி அரசு. இப்போது இருப்பது அறுதி பெரும்பான்மை கொண்ட, சகல சக்தியையும் கொண்டுள்ள மோடி அரசு. மாநிலத்தில் இருப்பது பாஜக ஆளுநர். இதுதான் வித்தியாசம். இதுதான் மிக முக்கிய வித்தியாசம். இப்போது செய்தியின் முதல் வரியை திரும்ப படித்துக்கொள்ளவும்.












Click it and Unblock the Notifications