ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கு டிசம்பர் 4 ல் இடைத் தேர்தல்

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த அதிமுக எம்எல்ஏ., பெருமாள் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். இதனையடுத்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2011 பொதுத்தேர்தலில் வாக்கு வித்தியாசம்
கடந்த 2011 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பெருமாள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 221 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வைச்சார்ந்த தமிழ்செல்வன் 66 ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றிருந்தார். மூன்றாவது இடத்தில் பாரதிய ஜனதா வேட்பாளர் ராஜாசெல்வம் 2 ஆயிரத்து 66 வாக்குகள் பெற்றிருந்தார்.
தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று இடத்தை தக்கவைக்குமா? அல்லது போட்டி பலமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டிசம்பர் 4ம் தேதியன்றுதான் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications